திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் துணிகர கொள்ளை: பேத்திக்கு வலைவீச்சு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் 600 பவுன் நகைகள் மற்றும் ரூ.3.25 லட்சம்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவருடைய பேத்தியைப் போலீசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை-கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்து ஆசாரி. பல ஆண்டுகளுக்கு முன் சில திரைப்படங்களைத்தயாரித்து வெளியிட்ட இவர் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் முத்து ஆசாரி சமீபத்தில் சாமி கும்பிடுவதற்காகத் திருப்பதிக்குச் செல்ல விரும்பினார்.
இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய பேத்தி முத்துலட்சுமியையும், அவருடைய கணவரையும்அழைத்த அவர் தன் வீட்டை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதிக்குக் கிளம்பினார்.
திருப்பதியிலிருந்து கடந்த 3ம் தேதி சென்னைக்குத் திரும்பினார் முத்து ஆசாரி. இதையடுத்து அன்று இரவேமுத்துலட்சுமி தன் கணவருடன் அவரிடம் வீட்டைத் திரும்பவும் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டார்.
இந்நிலையில் முத்து ஆசாரி தன் வீட்டில் உள்ள ரகசிய அறையைத் தற்செயலாகப் பார்த்தபோது அதன் கதவுஉடைந்திருப்பது தெரிய வந்தது. அதில்தான் அவர் நகைகள் மற்றும் பணத்தை எப்போதும் வைத்திருப்பார்.
கதவு உடைந்திருப்பதைப் பார்த்துப் பதறிப் போன முத்து ஆசாரி, அதைத் திறந்து பார்த்தபோதுதான் அதிலிருந்தநகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கோடம்பாக்கம் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசாரும் விரைந்து வந்து முத்துஆசாரியிடம் விசாரித்தனர்.
சுமார் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 600 பவுன் தங்க நகைகளும், ரூ.3.25 லட்சம் ரொக்கப் பணமும்கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முத்து ஆசாரி தெரிவித்தார். தான் திருப்பதிக்குப் போயிருந்தபோதுதான் இந்தக்கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து முத்து ஆசாரியின் பேத்தியை விசாரிக்க முயன்ற போதுதான், முத்துலட்சுமியும் அவருடையகணவரும் தலைமறைவாகியிருப்பது போலீசாருக்குத் தெரிய வந்தது.
அவர்கள் இருவரும்தான் ரகசிய அறையின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்திருக்கவேண்டும் என்று முத்து ஆசாரி தெரிவித்தார்.
இதையடுத்து முத்துலட்சுமியையும், அவருடைய கணவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications