பரிதியைக் கண்டித்துப் பேசிய அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை: காங். முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பியுமான அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககட்சி மேலிடத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர்இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டாக்டர் குமாரதாஸ் தலைமையிலான தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் செயல்பாட்டைஅன்பரசு ஆதரித்து வருகிறார். டாக்டர் குமாரதாஸ் குறித்து பரிதி இளம்வழுதி கூறிய புகார்களை அன்பரசுமறுத்துள்ளார். பரிதியையும் அவர் கண்டித்துள்ளார்.

அன்பரசுவின் கருத்துக்கள், நிலைப்பாடு ஆகியவை காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டுக்குவிரோதமானது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார் அவர். கட்சித் தொண்டர்கள் மத்தியில் பல்வேறுசந்தேகங்கள் எழவும் அன்பரசுவின் செயல் வாய்ப்பு ஏற்படுத்தி விட்டது.

எனவே அன்பரசு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என கட்சி மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் காரியக்கமிட்டி பரிந்துரை செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்பரசு ஆரம்பகாலத்தில் இருந்தே ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்பது காங்கிரஸ் கட்சியினர் அறிந்தஒன்றுதான். இந்நிலையில், ஜெயலலலிதாவின் ஆசியுடன் செயல்பட்டு வரும் டாக்டர் குமாரதாஸுக்கு ஆதரவாகஅவர் கருத்து வெளியிட, அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+