ஜெ. வீட்டில் வைர நகைகளை மீட்டோம்: அதிகாரி சாட்சியம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது, அவரது அனுமதி பெற்ற பிறகே சோதனை நடந்ததுஎன்று முதலாவது தனி நீதிமன்றத்தில் முன்னாள் காவல் துறைக் கண்காணிப்பாளரான நல்லம்ம நாயுடு இன்று 2வதுநாளாக சாட்சியம் அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (1991-96) வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புக்கு சொத்துக்கள்சேர்த்ததாக ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான சுதாகரன் மற்றும் இளவரசிஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கத்திடம் சமீபத்தில் மாற்றப்பட்டது.இவ்வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இவ்வழக்கில் அனைத்து மற்ற அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடைசி அரசுத்தரப்பு சாட்சியான நல்லம்மநாயுடு நேற்று முன்தினம் சாட்சி அளித்தார். இவர் தான் இந்தச் சொத்துக் குவிப்புவழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நல்லம்மநாயுடு மீண்டும் தனி நீதிமன்றத்தில்ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா மீதான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது முறையாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. முதல் தகவல் அறிக்கையைக்காட்டி, ஜெயலலிதாவின் அனுமதியைப் பெற்ற பிறகே அவரது வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினோம்.
அப்போது அவரது வீட்டில் இருந்த வைரம் மற்றும் தங்க நகைகளைக் கைப்பற்றினோம். இளவரசி ராயப்பேட்டைபெனிபிட் பண்ட்டில் கடன் வாங்கியதற்கான பத்திரங்கள், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஆந்திராவீடுகளின் கட்டட வரைபடங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
914 பட்டுச் சேலைகள், 714 சூட்கேஸ்கள், 386 ஜோடி செருப்புகள், 91 ரிஸ்ட் வாட்சுக்கள் ஆகியவையும்கைப்பற்றப்பட்டன. வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பட்டியலிட்டு, அதில் ஜெயலலிதாவின் கையெழுத்தையும்நாங்கள் பெற்றுக் கொண்டோம். பின்னர் அந்தப் பொருட்கள் மதிப்பிடப்பட்டன என்றார் நல்லம்ம நாயுடு.
மீண்டும் அவர் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிப்பார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications