புலிகளின் படகில் விமான எதிர்ப்பு துப்பாக்கி பிடிபட்டது
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று ஜெர்மனியில்துவங்கவுள்ள நிலையில், இலங்கையின் நெடுந்தீவு கடல் பகுதியில் புலிகளுக்குச் சொந்தமான ஒரு படகில் விமானஎதிர்ப்பு துப்பாக்கி ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் இந்தியப் பதிவு எண்ணைக் கொண்ட ஒரு புலிகளின் படகை இலங்கை கடற்படையினர்கைப்பற்றினர்.
ஆனால் தங்கள் படகில் கடற்படையினர் ஏறினால் சயனைடு அருந்தித் தற்கொலை செய்து கொள்வோம் என்றுபடகில் இருந்த மூன்று புலிகளும் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு உடனடியாகத் தகவல்தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து சோதனையிட்டபோது புலிகளின் படகில் இருந்த 23 மி.மீ. நீளமுள்ள மெஷின் கன்கைப்பற்றப்பட்டது. இந்தத் துப்பாக்கியைக் கொண்டு வானில் பறக்கும் விமானத்தைத் தரையிலிருந்தே தாக்கிஅழிக்க முடியும்.
இந்தச் சம்பவம் குறித்து கண்காணிப்புக் குழுவினர் தெரிவிக்கையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள்மீறியுள்ளனர். ஆனாலும் இது தொடர்பான மேல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இலங்கை அரசுதான் முடிவுசெய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இத்தகவல் உடனடியாக பெர்லின் நகருக்கும் பறந்தது. அங்குள்ள புலிகள் மற்றும் இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தைக் குழுவினரிடையேயும் இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கல் ஏற்படாத வகையில் அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் ஐந்தாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்தொடங்கவுள்ளன.
புலிகளின் படகில் விமான எதிர்ப்பு துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில்முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும் சிறார் புலிகளின் எதிர்காலம் மற்றும் மனித உரிமை தொடர்பான விஷயங்களும் இந்தப்பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படவுள்ளன.
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தில் உடல் நிலையைக் கருத்தில் கொண்டுதாய்லாந்திலிருந்து ஜெர்மனிக்கு மாற்றப்பட்டுள்ள இந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நாளையுடன்முடிவடைகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications