பாரபட்சம் காட்டுகிறார் காளிமுத்து: பொன்முடி புகார்
சென்னை:
சபாநாயர் காளிமுத்து சட்டசபையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதையஎம்.எல்.ஏவுமான பொன்முடி கூறினார்.
சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் பரிதி இளம்வழுதியும், பொன்முடியும் குந்தகம் விளைவிக்கும் வகையில்நடந்து கொள்வதாக சமீபத்தில் காளிமுத்து கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்து பொன்முடி வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
சட்டசபையில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் காளிமுத்து. ஆளுங்கட்சியினர் எவ்வளவு நேரம்வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளளாம் என வரைமுறையேஇல்லாமல் அனுமதி அளிக்கிறார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மக்கள் பிரச்சினைகளை எடுத்து வைக்க முயன்றால் அவர்களுக்கு அனுமதிதருவதில்லை.
ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் சுமார் 40 நிமிடங்கள் வரை பேசஅனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் கூறிய சில புகார்களுக்குப் பதிலளிக்க எதிர்க் கட்சித் துணைத் தலைவரானதுரைமுருகன் முயன்றபோது அதற்கு அனுமதி தர சபாநாயகர் மறுத்துவிட்டார்.
நடுநிலையோடு இருக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தைக் கூட மறந்து விட்டு ஆளுங்கட்சிக்கு மட்டுமேசாதகமாக செயல்படுவது என்ற வைராக்கியத்துடன் காளிமுத்து நடந்து கொள்கிறார் என்று அவ்வறிக்கையில்பொன்முடி கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications