இந்தியா- ரஷ்யா இணைந்து தயாரிக்கும் போர் விமானம்
பெங்களூர்:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து புதிய போர் விமானத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதுவரை ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை இந்தியா வாங்கி வந்தது. இது தவிர ரஷ்யாவிடம் லைசென்ஸ் பெற்று உள்நாட்டிலேயே மிக் 21, மிக் 27, மிக் 29 ஆகிய விமானங்களை இந்தியாவே தயாரித்து வருகிறது.
சமீபகாலமாக உள் நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அர்ஜூன் டாங்கிகள்,எல்.சி.ஏ விமானம் (லைட் காம்பேட் ஏர்கிராப்ட்), ஏ,எல்.எச். (அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்), அக்னி, பிரித்வி, நாக்,திரிசூல் ஏவுகணைகள், லக்ஷயா விமானியில்லா விமானம், ராஜேந்திரா ரேடார்கள், சாரஸ் போக்குவரத்து விமானம்போன்றவை இந்த முயற்சிகளின் பலனாக உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்டன.
ஏ.எச்.எச். ஹெலிகாப்டரை லைட் அட்டாக் ஹெலிகாப்டராக (தாக்குதல் ஹெலிகாப்டராக) மாற்றும் முயற்சிகளும் நடந்துவருகின்றன.
மேலும் மற்ற நாடுகளுடன் இணைந்தும் நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. ரஷ்யாவும்இந்தியாவும் இணைந்து தான் பிரம்மோஸ் (பிரம்மபுத்திரா- மாஸ்கோ நதிகளின் பெயர் சுருக்கம்) ஏவுகணையைத் தயாரித்தன.கப்பல்களைத் தாக்கும் இந்த ஏவுகணையை நீர்மூழ்கி, கப்பல், தரையிலிருந்து செலுத்தலாம்.
இப்போது ரஷ்யாவுடன் இணைந்து போர் விமானத்தைத் தயாரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. உலகின் மிகச் சிறந் சுகோய் ரகபோர் விமானத்தைத் தயாரித்து வரும் ரஷ்ய நிறுவனத்துடன் சேர்ந்து இந்தப் பணியை இந்தியா தொடங்க உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்துக்கான கம்ப்யூட்டர்கள் மற்றும்சாப்ட்வேரை இந்தியா தான் தயாரித்து வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போது இரு நாடுகளும் இணைந்தேஅடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இது தவிர நவீன பயணிகள் விமானம், சரக்கு விமானத்தையும் இரு நாடுகளும் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து விவாதிக்க வரும் ஏப்ரலில் இந்தியக் குழு மாஸ்கோ செல்கிறது.
விமானக் கண்காட்சி சிறப்புச் செய்திகள்
- Battle of jets geared to set Bangalore skies ablaze
- Aero Show 2003 - A Carnival over Blore sky
- India to test Agni-III with 3000 kms range: Aatre












Click it and Unblock the Notifications