தமிழகத்துக்கு - காவிரியில் நீர் திறப்பு: எதிர்த்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்
மைசூர்:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர்திறந்துவிடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அம்மாநில விவசாயிகள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக கர்நாடகஅரசு 10 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்செய்தது.
ஆனால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறக்க முடியாது என்று கர்நாடக அரசு பதில் மனுவைத் தாக்கல்செய்தது.
நேற்று முன்தினம் இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காவிரிகண்காணிப்புக் குழுவிடம் கலந்து ஆலோசித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி(0.4 டி.எம்.சி.) வீதம் வரும் 10ம் தேதி வரை நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார். சம்பா பயிர்களைக் காப்பாற்ற இந்த நீர் போதாது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நேற்று மாலை கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு நீரைத் திறந்துவிட்டது கர்நாடக அரசு. தினமும் 4,500 கன அடி என்ற அளவில் நீர் திறந்துவிடப்பட்டுக் கொண்டிருப்பதாகஅம்மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படுவதை எதிர்த்து கர்நாடக மாநில விவசாயிகள் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
மாண்டியா மற்றும் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று பல இடங்களில் சாலை மறியல்போராட்டம் நடத்தினர். சில இடங்களில் மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவைஎதிர்த்து அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இன்றும் மண்டியா மாவட்டத்தில் பல இடங்களிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக பெங்களூர்-மைசூர் சாலையில் சுமார் 200 விவசாயிகள் நடத்திய போராட்டத்தினால் அப்பகுதியில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பஸ்கள் இப்பகுதியில் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டு விட்டன. ஆனாலும் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
கிருஷ்ணா தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்திற்கு நீரைத் திறந்துவிட்டுள்ளார் என்று குற்றம்சாட்டிய விவசாயிகள், நீர் திறந்துவிடப்படுவதை நிறுத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் கூறினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications