நாளை காவிரி ஆணைய கூட்டம்: டெல்லி செல்கிறார் ஜெ.
டெல்லி:
காவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய்க்கு நீதிபதிக்கு இணையான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளநிலையில், நாளை அவர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி வீதம் நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 6ம் தேதி கர்நாடகஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7ம் தேதி மாலை முதல் கர்நாடகத்தின் கபினிஅணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில் வாஜ்பாய் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், இவ்விஷயத்தில்உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான அதிகாரம் அவருக்கு அளிக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.
காவிரிப் பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் பிரதமர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதுதான்உச்ச நீதிமன்றத்தின் முடிவாகும் என்றும் அது கூறியது.
இதைத் தவிர, எந்த முதல்வர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. காவிரி ஆணையக் கூட்டம் கட்டாயம் நடந்தேஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வரும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் இக்கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று இருமாநில வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்திடம் உறுதி அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி ஜெயலலிதாவும், கேரள முதல்வர் ஆண்டனியும் கலந்து கொள்ளாததைத்தொடர்ந்து ஆணையக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜனவரி 13ம் தேதி ஆண்டனியுடன்பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் காலை வாரி விட, மீண்டும் ஆணையக் கூட்டம் ரத்தானது.
இந்நிலையில் நாளை காவிரி ஆணையக் கூட்டத்தை மீண்டும் கூட்டியுள்ளார் பிரதமர்.
காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வரும் நிலையில், பிரதமர் நாளை நதி நீர் பங்கீடுதொடர்பான விஷயத்தில் முக்கிய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சுகாதார நீர் தொடர்பான ஒரு மாநாட்டில் பேசிய வாஜ்பாய், தமிழகமும் கர்நாடகமும் ஒருவரை ஒருவர்நன்றாகப் புரிந்து கொண்டு, பேசி காவிரி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பதுநினைவுகூறத்தக்கது.
ஜெ. நாளை டெல்லி பயணம்:
இந்நிலையில் காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா நாளை டெல்லிக்குச் செல்கிறார்.
நாளை பிற்பகல் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார் ஜெயலலிதா.
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஜெயலலிதா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கருகிப் போய்விட்ட சம்பா பயிர்களைக் காப்பாற்ற இந்த நீர் போதாது என்றும், தற்போது எந்த ஒருவழியும் தெரியாமல் நிற்கிறோம் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி 13ம் தேதியிலிருந்து 14 நாட்களுக்கு இந்த அளவு நீரை கர்நாடகம் திறந்து விட்டிருந்தாலே 40சதவீத சம்பா பயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். எனவே தற்போது திறந்துவிடப்படும் இந்த நீரால் எந்தப்பயனும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே கபினி அணையிலிருந்து கர்நாடகம் திறந்து விட்ட நீர் இன்று மாலை மேட்டூ"ர் அணையை வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications