600 பவுன் நகையை பேத்தி திருடியதாக "டூப்" விட்ட தாத்தா!
சென்னை:
பேத்தியை மிரட்டுவதற்காக வீட்டிலிருந்த 600 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை அவர் திருடிச் சென்றுவிட்டதாகப் பொய்ப் புகார் கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளரின் குட்டு வெளிப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் வசித்து வருபவர் முத்து ஆசாரி. இவர் சில திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் தனது வீட்டில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த 600 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம்ஆகியவை திருடு போய் விட்டதாகவும் தனது பேத்தி முத்துலட்சுமியும் அவருடைய கணவரும்தான் அவற்றைத்திருடியுள்ளதாகவும் அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியபோது, பல குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில், திருடு போனதாகக் கூறப்படும்வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் எந்த இடத்திலும் கைரேகை சிக்கவில்லை. மேலும் திருட்டு நடந்தது போன்ற சூழலும்அங்கு காணப்படவில்லை.
முத்து ஆசாரியின் மனைவி காந்திமதியும் எந்தவிதமான கவலையும் இல்லாமல் காணப்பட்டார். போலீஸ்விசாரணையைக் கூட அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் முத்து ஆசாரியிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இவ்வளவு நகைஎப்படி வந்தது, இதற்கான கணக்கு இருக்கிறதா, ரொக்கப் பணம் எந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது போன்றவிவரங்களை அவரால் கொடுக்க முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில் டிவியில் வந்த இந்தத் திருட்டுச் செய்தியைப் பார்த்த முத்துலட்சுமியும் அவருடைய கணவரும்காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். தன் தாத்தா கூறுவது முழுப் பொய் என்றும், அவரது வீட்டில் 600 பவுன்நகையே கிடையாது என்றும், தன்னை மிரட்டவே இவ்வாறு செய்துள்ளார் என்றும் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், முத்துலட்சுமியிடம் தொடர்ந்த விசாரணை நடத்தினர். அப்போதுதான்முத்துலட்சுமியின் தாயாருக்கும், முத்துஆசாரிக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது என்றம் இதனால்முத்துலட்சுமியின் தாயார் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தாத்தா வீட்டுக்கு வந்திருந்த முத்துலட்சுமி தன் தாயாரைப் பார்க்கப் போவதாகக் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த முத்து ஆசாரி, அப்படிப் போனால், எனது வீட்டில் நகையைத்ை திருடிச் சென்று விட்டாய்என போலீஸில் புகார் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
அவர் மிரட்டுவதற்காக அப்படிக் கூறுவதாக நினைத்த முத்துலட்சுமி தன் கணவருடன் தாயார் வீட்டுக்குப்போயுள்ளார்.
தன் பேத்தி தன்னை மதிக்கவில்லையே என்று ஆத்திரமடைந்த முத்து ஆசாரி நகை, பணத்தை முத்துலட்சுமிதான்திருடிக் கொண்டு விட்டதாக நாடகமாடியுள்ளதாக போலீஸாரிடம் முத்துலட்சுமி தெரிவித்தார்.
இதையடுத்து முத்து ஆசாரியைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications