"நக்கீரன்" நிருபர் கோவை சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

சத்தியமங்கலம் காட்டில் மாணவன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு,போலீஸ் காவலில் இருந்த "நக்கீரன்" பத்திரிக்கையின் நிருபரான மகரன் என்ற கிருஷ்ணகுமார் சிறையில்அடைக்கப்பட்டார்.

போலீஸ் உளவாளியாகச் செயல்பட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர் பக்தவத்சலம் என்பவர் சிலஆண்டுகளுக்கு முன் தன் நண்பர்களோடு சத்தியமங்கலம் காட்டுக்குள் சென்றார். ஆனால் பக்தவத்சலத்தைத் தவிரமற்றவர்கள் திரும்பி விட்டனர்.

சில நாட்களுக்குப் பின் பக்தவத்சலத்தின் அழுகிய பிணம்தான் காட்டுக்குள்ளிலிருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில் அவரைக் கொன்றதாகக் கூறி சந்தனக் கடத்தல் வீரப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர்இந்தக் கொலையில் தொடர்புடையாதகக் கூறி "நக்கீரன்" ஆசிரியர் கோபால் மற்றும் நிருபர் சிவசுப்ரமணியன்ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வீரப்பனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த வழக்கில் சிவசுப்ரமணியம் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.கோபாலிடம் விசாரணை நடந்துள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் நிருபரான மகரன் திடீரென்று கடந்த ஜனவரி 29ம் தேதி கைது செய்யப்பட்டார்.அவரை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கநீதிபதி அனுமதி அளித்தார்.

இதையடுத்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த மகரன் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.அவரை வரும் 24ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில்அடைக்கப்பட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+