பொடா வழக்கு: குற்றப் பத்திரிக்கையை பெற்றார் நெடுமாறன்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ. நெடுமாறன் உள்படஅக்கட்சியைச் சேர்ந்த 4 பிரமுகர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் விடுதலைப்புலிகளைஆதரித்துப் பேசியதாக ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியன், பாவாணன் மற்றும்டாக்டர் தாயப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நான்கு பேர் மீதும் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுமாறன் உள்பட நான்கு பேரும் இன்றுசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது குற்றப்பத்திரிக்கையின் நகல்களை அவர்களிடம் நீதிபதி எல். ராஜேந்திரன் வழங்கினார். சுமார் 1,135பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில் 66 ஆவணங்களும், 112 சாட்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிக்கையை வழங்கிய பின்னர் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 5ம் தேதிக்குநீதிபதி ராஜேந்திரன் ஒத்திவைத்தார். இதையடுத்து நெடுமாறன் உள்ளிட்ட நான்கு பேரும் கடலூர் சிறைக்குக்கொண்டுசெல்லப்பட்டனர்.
இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஷாகுல் ஹமீதுஎன்பவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கக் கோரி, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் "க்யூ" பிரிவு போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications