சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் இரு பெரும் விபத்துகள்: 11 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை & திண்டிவனம்:

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அடுத்தடுத்து நடந்த இரு விபத்துகளில் ஐந்துபெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் அருகே வேன் மீது லாரி மோதியதில் 7 பேரும் திண்டிவனம் அருகே லாரி கவிழ்ந்ததில் 4 பேரும்பரிதாபமாக பலியாயினர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதற்காக மதுரை மாவட்டம் அரகண்ணடநல்லூரைச் சேர்ந்தவர்களும்விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஒரு வேனில் சென்றனர். இந்தக் கார் கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகேசென்று கொண்டிருந்தது.

அப்போது உப்பு ஏற்றி வந்த ஒரு லாரி இந்த வேன் மீது பின்னால் இருந்து மிக பயங்கர வேகத்தில் மோதியது.இதில் அந்த வேன் தூக்கி எறியப்பட்டு அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 5 பேர் அந்தஇடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவனையில்சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 2 பேர் மருத்துவமனையிலேயே இறந்தனர். பலியான 7 பேரில்இருவர் பெண்கள் ஆவர்.

லாரி டிரைவர் மிக வேகமாகவும் முரட்டுத்தனமாகவும் ஓட்டி வந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள்தெரிவித்தனர்.

திண்டிவனத்தில்...

அதே போல திண்டிவனம் அருகே கம்பி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களும் மற்றொருவரும் பலியாயினர்.

சென்னையில் இருந்து இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு அந்த லாரி கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது விழுப்புரம் செல்ல வேண்டும் என்று கூறி 4 பெண்களும் இன்னொருவரும் அந்த லாரியில் ஏறினர்.

இவர்கள் கம்பிகள் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். படுவேகத்தில் சென்ற அந்த லாரி திண்டிவணம்அருகே ஓங்கூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் இரும்புக்கம்பிகளில் நசுங்கி 3 பெண்களும் ஒரு நபரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த இன்னொரு பெண் திண்டிவனம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள்அனைவரும் கரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சென்னையில் கூலிவேலை செய்து வந்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+