நக்கீரன் கோபால் வீடு, அலுவலகத்தில் போலீசார் ரெய்ட்
சென்னை:
மாணவன் பக்தவச்சலம் கொலை வழக்குத் தொடர்பாக, நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலின்வீடு மற்றும் பத்திரிக்கை அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஈரோட்டிலிருந்து வந்த இந்தப் போலீசார் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கோபாலின் வீட்டுக்குச் சென்றனர்.கோபால் எங்கே என்று கேட்டனர். ஆனால், தன்னை போலீசார் கைது செய்ய வாய்ப்பிருப்பதால்கோபால் சமீப காலமாக வீட்டில் தங்குவதை தவிர்த்து வருகிறார்.
அவர் எங்கிருக்கிறார், எப்போது அலுவலகம் வருவார் என்பது யாருக்கும் தெரிவது இல்லை.
கோபாலின் வீட்டில் போலீசாருக்கு எந்த ஆவணமும் சிக்கவில்லை. இதையடுத்து நக்கீரன்பத்திரிக்கை அலுவலகத்துக்கு வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆசிரியர் கோபாலின் அறையைத்திறந்து காட்டுமாறு ஊழியர்களுககு உத்தரவிட்டனர்.
ஆனால், வக்கீல் முன்னிலையில் தான் அறையைத் திறந்து காட்டவோம் என்று ஊழியர்கள்கூறிவிட்டனர். இதனால் வேறு வழியின்றி போலீசார் வெளியேறினர்.
அதேபோல, கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து வந்த இன்னொரு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் குழுராயப்பேட்டை மற்றும் ஜாம்பஜார் பகுதியில் உள்ள கோபாலின் அலுவலகங்களுக்கும் சென்றுவிசாரணை நடத்தியது.
தன்னை நிருபர் என்று கூறிக் கொண்டு காட்டுக்குள் சென்ற பக்தவச்சலம் என்ற போலீஸ்உளவாளியை அடையாளம் கண்டுகொண்ட வீரப்பன் சுட்டுக் கொன்று உடலை காட்டுக்கு வெளியேவீசினான்.
இந்த வழக்கில் தான் நக்கீரனையும் தேவையில்லாமல் தொடர்புபடுத்தி அந்தப் பத்திரிக்கையைஅச்சுறுத்தி வருகிறது தமிழக அரசு. இதுவரை இப் பத்திரிக்கையின் 2 நிருபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோபாலையும் இந்த வழக்கில் தொடர்புபடுத்தி அவரைக் கைது செய்ய போலீசார் முயன்றுவருகிறன்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications