சாத்தான்குளத்தில் போலீஸ் உடையில் ரெளடிகள்: பீட்டர் அல்போன்ஸ் திடுக் தகவல்
சென்னை:
சாத்தான்குளத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை அதிமுக குவித்துள்ளதால் அங்குஇடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பது சந்தேகம் தான் என காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் முதல் கட்டப் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர் இன்று செய்தியாளர்களிடம்பேசுகையில்,
சாத்தான்குளத்தில் அதிமுவினர் மேற்கொண்டுள்ள தேர்தல் விதிமீறல்களைக் காவல்துறையினர் கண்டுகொள்வதேஇலலை. அங்கு போலீசாரையே காண முடியவில்லை என்பது தான் உண்மை.
தொகுதிக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தமே இல்லாத ரெளடிகளை அங்கு அதிமுகவினர் கொண்டு வந்தவண்ணம்உள்ளனர். இதற்கு போலீஸாரின் முழு உதவியும் அதிமுகவினருக்குக் கிடைக்கிறது.
போலீஸ் சீருடையிலும் கூட ரெளடிகள் உலவிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைஉருவாகியிருப்பது பெரும் வருத்தம் தருகிறது.
ரவுடிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் ரிஸ்க் எடுத்து வாக்களிக்க வேண்டுமா என்ற பயம் மக்களைஅச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவினரின் தேர்தல் முறைகேடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே புகார்கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் புகார் கொடுக்க உள்ளோம்.
அதிமுவினர் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர்அடையாள அட்டைகளைக் கூட பணம் கொடுத்து அதிமுகவினர் வாங்கி வருகின்றனர். வேறு படங்களை ஒட்டிபோலி அட்டைகளும், போலியான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
குடங்கள், வேட்டிகள், சேலைகள் என வாக்காளர்களுக்கு அள்ளித் தரப்படுகின்றன. இந்த சிறிய நன்மைக்காகதங்கள் வருங்காலத்தையே வாக்காளர்கள் வீணடித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தொகுதியை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ரூ. 20 லட்சம் வரை அதிமுகவினர் இதுவரைசெலவிட்டுள்ளனர். இதனால் சாத்தான்குளத்தில் தேர்தலையே அதிமுக விலைக்கு வாங்க முயன்று வருகிறது.
ரெளடிகளுடன் ஆயுதங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அங்கு ஒரு குண்டு வெடிப்பும் நடந்தது.ரெளடிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு தான் வெடித்ததாக பொது மக்களே கூட கூறுகின்றனர்.
ஆனால், இது தொடர்பாக எந்த வழக்கையும் போலீஸ் பதிவு செய்யவில்லை என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
ஜனாதிபதிக்கு தந்தி:
இதற்கிடையே தொகுதிக்கே சம்பந்தம் இல்லாதவர்களை அதிமுகவினர் கள்ள ஓட்டுக்காக கொண்டு வந்து குவித்துவருவதால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் வேட்பாளர்மகேந்திரன் தந்தி அனுப்பியுள்ளார்.
போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதால், இத் தொகுதியில் தேர்தல் தினத்தன்று பெரும்கலவரம் நடக்கலாம் என்றும் அவர் அந்தத் தந்தியில் எச்சரித்துள்ளார்.
அதிமுகவினரால் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ள வெளியூர்வாசிகளை உடனடியாக வெளியேற்ற உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications