அரசு மருத்துவமனையில் சிக்கலான கல்லீரல் அறுவை சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுமார் 75 சதவீத கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட பெண்ணுக்கு வெற்றிகரமாகஅறுவைச் சிகிச்சை செய்து அவருடைய உயிரைக் காப்பாற்றியுள்ளனர் சென்னை அரசினர்ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த மாதம்தனது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம்ஏற்பட்டது.

தொடர்ந்து கல்லீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதலில் காஞ்சிபுரத்தில் சிகிச்சை பெற்ற அவர்பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவரை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் அவரது கல்லீரலில் ரத்தக் கட்டி ஏற்பட்டுள்ளதாகவும்,கல்லீரல் 75 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அரசு பொதுமருத்துவமனைக்குச் செல்லுமாறும் கூறினர்.

இதையடுத்து விஜயலட்சுமி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.இருப்பினும் ரத்தக் கட்டி உள்ள இடத்தை சரியான முறையில் கண்டுபிடிக்க அரசு பொதுமருத்துவமனை டாக்டர்களால் முடியவில்லை. இதையடுத்து விஜயலட்சுமி மீண்டும் ஸ்டான்லிக்கேஅனுப்பப்பட்டார்.

அங்கு டாக்டர் டேனியல் தலைமையிலான டாக்டர்கள் குழு தீவிர முயற்சிக்குப் பின்னர் ரத்தக்கட்டியை அகற்றினர். இதையடுத்து அந்தப் பெண் தற்போது குணமடைந்து வருகிறார். அவரதுஉயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்காக அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டாலும் இறுதியில் விஜயலட்சுமிக்கு புத்துயிர்கொடுத்துவிட்டனர் அரசு டாக்டர்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+