எஞ்சிய சம்பா பயிர்களைக் காக்க கடைசி முயற்சி: மேட்டூர் அணை மீண்டும் திறப்பு
சேலம்:
மிகக் குறைவான நீரே உள்ளபோதிலும், காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணைமீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் சுத்தமாக தண்ணீர் வற்றிப் போனதால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அணைமூடப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையம் ஆகியவற்றின் தொடர்உத்தரவுகளுக்குப் பிறகு கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது.
இதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர் வரத் தொடங்கியது. இதையடுத்து தற்போதுமேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இருப்பினும் அணையில் குறைந்தஅளவே தண்ணீர் இருப்பதால் மூன்று நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என்றும்,வரும் 19ம் தேதி அணை மூடப்படும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே முக்கால்வாசிக்கும் மேலான சம்பா பயிர்கள் கருகிப்போய்விட்டன. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நீரும் அப்பகுதிகளுக்குச் சென்று சேர குறைந்ததுஒரு வாரமாகும். அதுவரை எஞ்சியுள்ள சம்பா பயிர்களாவது தாக்குப் பிடிக்குமா என்றுதெரியவில்லை.
அணையில் மிகக் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ள நிலையில் அணை திறக்கப்பட்டிருப்பதுஇதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அணையின் நீர் மட்டம் தற்போது 32.22 அடியாக (8.42டி.எம்.சி.) உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,058 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications