ராமநாதபுரம் அருகே ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே 12 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 12 டெட்டனேட்டர்கள் ஆகியவற்றைப்போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் ஒரு நிலத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 ஜெலட்டின்குச்சிகளையும், 12 டெட்டனேட்டர்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
அவற்றை உடனடியாகக் கைப்பற்றிய போலீசார், அந்த நிலத்துக்குச் சொந்தக்காரரைத் தேடிவருகின்றனர்.
தன்னுடைய நிலத்தில் போலீசார் சோதனை நடத்துகின்றனர் என்பதைக் கேள்விப்பட்டதுமே அவர்தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications