மதுரை பஸ் நிலைய பிரச்சினை: கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுரை:
மதுரையில் பழங்காநத்தம் பஸ் நிலையம் மீண்டும் செயல்படும் என்று அம்மாவட்ட கலெக்டர்பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் வெளியூர் பேருந்துகள் வந்துசெல்வதற்காக ஊருக்கு வெளியே மாட்டுத்தாவணி என்ற இடத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து வட, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் நின்று வந்த அண்ணா மற்றும்பழங்காநத்தம் பஸ் நிலையங்கள் முழுவதுமாகச் செயலிழந்து போயின.
இந்நிலையில் இம்மாதம் 20ம் தேதி (நேற்று) முதல் பழங்காநத்தம் பஸ் நிலையம் மீண்டும்செயல்படத் தொடங்கும் என்று சமீபத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்தார். அதன்படி தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் இனி பழங்காநத்தம் பஸ் நிலையத்திலிருந்தே செயல்படும்என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கடும்அதிருப்தி அடைந்தனர்.
தென் மாவட்ட பஸ்கள் அனைத்தும் மீண்டும் பழங்காநத்தம் பஸ் நிலையத்திற்கே மாற்றப்பட்டால்தங்களுடைய வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பான மனுவை இன்று நீதிபதி மிஸ்ரா விசாரித்தார். மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் பழங்காநத்தம் பஸ் நிலையத்தில்தான் செயல்படும் என்றுகலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.
மேலும் இந்த மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் மார்ச் 4ம் தேதி நடைபெறும் என்றும்நீதிபதி மிஸ்ரா கூறினார்.
மதுரை மாநகராட்சியின் முடிவை எதிர்த்து ஏற்கனவே மாட்டுத்தாவணி பஸ் நிலைய வியாபாரிகள்நேற்று முன் தினம் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications