நாடாளுமன்றத்தில் பெர்னாண்டஸை நெளிய வைத்த திமுக
டெல்லி:
பொடா சட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா என்று விளக்கம் அளிக்க வேண்டும் என தேசியஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு திமுககேள்வி எழுப்பியுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில்உள்ள பெர்னாண்டஸ் மீது திமுக கடுப்பில் உள்ளது. சமீப காலமாக கிட்டத்தட்ட பா.ஜ.க. தொண்டராகவே இவர்மாறிவிட்டதாக கருணாநிதி கருதுகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவுடன் பா.ஜ.க. நெருங்கும் விஷயத்திலும் பெர்னாண்டசின் கை இருப்பதாக திமுககருதுகிறது. மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அவரைச் சந்திக்கவந்த பெர்னாண்டசை சந்திக்காமல் தவிர்த்தார் கருணநிதி.
பொடா சட்டத்தை எதிர்ப்பதாக திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவை கூறிவிட்ட நிலையில் இந்த விவகாரத்தில் தேசியஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான பெர்னாண்டஸ் தனது கருத்தை இதுவரை வெளியிடவில்லை.
அதே நேரத்தில் மதிமுக பொதுச் செயாலாளர் வைகோவை 4 முறை வேலூர் சிறைக்கு வந்து சந்தித்துவிட்டார்.குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடும் முன் வைகோவைப் போய் அவர் சந்திப்பதும், அரசுக்குதொடர்ந்து ஆதரவாக இருக்குமாறு கோருவதும் வழக்கமாகிவிட்டது.
பொடா விவகாரத்தில் பா.ஜ.க. மீது கடுப்பில் உள்ள வைகோவை சமாதானப்படுத்தவே அவர் இச் சந்திப்புகளைமேற்கொண்டார்.
இந் நிலையில் பொடா சட்ட விவகாரத்தில் பெர்னாண்டசின் நிலை என்ன என்று எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு நாடாளுமன்றத்தில் திமுகவும் கேள்வி எழுப்பி அவரை நெளியச் செய்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சியினர் மக்களைவையில் பெரும் அமளி ஏற்படுத்தினர்.அப்போது எதிர்க் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு மத்திய அரசுக்கு திமுக சில கேள்விகளை எழுப்பியது.குறிப்பாக பெர்னாண்டஸைக் குறி வைத்தே திமுக எம்.பிக்கள் பேசினர்.
திமுகவைச் சேர்ந்த எம்.பியான பழனி மாணிக்கம் பேசுகையில்,
இச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோதே இது முறைகேடாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதை திமுக சுட்டிக்காட்டயது. மிசா சட்டத்தின்போது திமுக பலவிதமான கொடுமைகளை அனுபவித்தது. இதனால் இந்த கொடியசட்டத்தை எதிர்த்தோம்.
ஆனால், அன்று பேசிய உள்துறை அமைச்சர் அத்வானி, இச் சட்டம் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்என்று உறுதியளித்தார். ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக வைகோவை ஜெயலலிதா முறைகேடாக கைதுசெய்தார். கடந்த 6 மாதங்களாக சிறைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் வைகோ.
அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான பெர்னாண்டஸ், ஒவ்வொரு முறையும்நாடாளுமன்றம் கூடும்போதும் தவறாமல் போய் வைகோவைச் சந்தித்துவிட்டு வருகிறார்.
வைகோவை அவர் ஆதரிக்கிறாரா இல்லையா, பொடா சட்டத்தை ஆதாரிக்கிறாரா இல்லையா என்றுவிளங்கவேயில்லை. இதை முதலில் பெர்னாண்டஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் பழனி மாணிக்கம்.
ஆளும் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசையும் அமைச்சரையும் நோக்கி திமுக எம்.பி. கேள்விஎழுப்பியதால் பா.ஜ.க. எம்.பிக்கள் பதில் பேச முடியாமல் அமர்ந்திருந்தனர்.
அப்போது அவையில் இருந்த பெர்னாண்டசும் பதில் கூறாமல் இறுகிய முகத்துடன் அமைதியாகஉட்கார்ந்திருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் பழனி மாணிக்கத்தை சூழ்ந்து நின்று கைகுலுக்கிஅவரது பேச்சுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications