இலங்கை அமைதிப் பேச்சு தொடங்கி ஓராண்டு நிறைவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி வரும்ஞாயிற்றுக்கிழமையுடன் ஓராண்டு நிறைவேறுகிறது.
2001ம் ஆண்டு டிசம்பரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி தான்நார்வே உதவியுடன் இரு தரப்பினரும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுவரை 5 சுற்றுப் பேச்சுக்கள் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்ட நிலையில் தமிழர்களிடையே பெரும்நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
வட கிழக்குப் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த உணவு தானியங்கள் தடையின்றி செல்லஆரம்பித்துவிட்டன.
சமீபத்தில் 4 புலிகளை கடற்படை சுற்றி வளைத்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு ராணுவவீரரை யாழ்பாணத்தில் வைத்து புலிகள் சுட்டுக் கொன்றனர். இச் சம்பவங்கள் தவிர பெரிய அளவில் இருதரப்பிலும் கடந்த ஓராண்டில் மோதல் ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட்டதாக இரு தரப்பினரிடம் இருந்தும் கிட்டத்தட்ட 3,000புகார்கள் நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவினரிடம் குவிந்துள்ளன.
இது குறித்து நார்வே அதிகாரி டிரோண்ட் புருஹோவ்டே கூறுகையில்,
ராணுவத் தரப்பிலும் புலிகள் தரப்பிலும் அமைதியை விரும்புபவர்கள் தான் பெரும்பான்மையினராக உள்ளனர்.ஆனால், இரு தரப்பிலும் உள்ள தீவிரவாத எண்ணம் கொண்டவர்களால் தான் பிரச்சனையே வருகிறது.
1972ம் ஆண்டு முதல் சுமார் 60,000 உயிர்ப் பலிகள் நடந்துவிட்டன. ஆனால், இனியும் உயிர்ப் பலிகளை இருதரப்பினரும் விரும்பவில்லை. ராணுவ அமைப்பு என்பதில் இருந்து ஜனநாயக அமைப்பாக மாற வேண்டியஅவசியம் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இங்கு நடக்கும் சம்பவங்களால் எனக்கே நம்பிக்கைஇழப்பு ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால், இரு தரப்பினரும் அமைதியின் தேவையை உணர்ந்துவிட்டது தான் மிகப் பெரிய மகிழ்ச்சி தருகிறது.
2001ம் ஆண்டில் கூட போரினால் 2,000 பேர் பலியானார்கள். கடந்த ஆண்டு சாவுகள் மிக மிகக் குறைவு. இதுதான் இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பிவிடும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்துள்ளது என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஓராண்டு முடிவதைக் கொண்டாடும் வகையில் கொழும்பில் உள்ள சுந்திரமையத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்த பிரதமர் ரணில் முடிவு செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications