புதிய தலைமை செயலகம்: "இந்த இடம் சரியல்ல"- கட்டிட நிபுணர்கள் கருத்து
சென்னை:
மெரீனா கடற்கரையோரம் தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிட்டுள்ள முடிவை தமிழக அரசுமறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கட்டிட வடிவமைப்பாளர்கள் கழகம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்தக் கழகத்தின் தமிழகப் பிரிவுத் தலைவரான மனோகரன் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா,தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஆகியோருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். அதில்,புதிய தலைமைச் செயலகம் கட்டத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சரியான தேர்வு அல்ல என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.
மனோகரனின் கடித விவரம்:
விவேகானந்தர் இல்லத்திற்கும் ராணி மேரி கல்லூரிக்கும் இடைப்பட்ட இடத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மிகவும் சிறியது.
மேலும், எதிர்காலத்தில் பக்கவாட்டிலோ அல்லது நீளவாக்கிலோ சட்டசபையை விரிவு படுத்தவாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு இந்த இடம் மிகவும் சிறியதாக உள்ளது.
மேலும், பல்வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் சுற்றிலும் உள்ளன. புதிய தலைமைச்செயலகக் கட்டிடம் வந்தால், இந்த புரதானக் கட்டடிங்கள் மறைக்கப்பட்டு விடும். அதன்பெருமையும் மறைந்து போய்விடும்.
இந்த வளாகத்தில் நன்கு வளர்ந்த பல ஆண்டுகள் வயதான 20 பெரிய மரங்கள் உள்ளன. கட்டிடம்கட்ட வேண்டுமானால் இவற்றை வெட்டியாக வேண்டும். எனவே இத்தனை இழப்புகளையும்தாண்டி கண்டிப்பாகத் தலைமைச் செயலகம் கட்டியாக வேண்டுமா என்பதை அரசு பரிசீலனைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் மனோகரன்.
மெரீனா கடற்கரை அருகே தலைமைச் செயலகத்தைக் கட்டக் கூடாது என்று அப்பகுதியைச் சேர்ந்தமீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற சமூக சேவகியான மேதா பட்கரும் தமிழக அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்துமீனவர்களுடன் போராட்டம் நடத்தினார் என்பதும் நினைவுகூறத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications