ஏ.டி.எம். கார்டு மூலம் திருட்டு: மேலும் 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து பணம்பறித்து வந்த மேலும் 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு வெங்கடாத்ரி என்ற தொழிலதிபர் தனது காரில் சென்னை-வடபழனியில்வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் அவரைத் தாக்கி பணம், நகைகளைப் பறித்துக் கொண்ட அந்தக் கும்பல் அவருடன் காரில்ஏறிக் கொண்டு ஏ.டி.எம். மையத்தில் காரை நிறுத்தி பணத்தை எடுத்து வருமாறு மிரட்டியது.
அதன்படி அவர் எடுத்துக் கொண்டு வந்த ரூ.11,000 பணத்தை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டுதப்பி ஓடிவிட்டது.
சென்னையில் இதுபோன்ற பல சம்பவங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் கடந்த வாரம் நிஜாமுதீன் என்பவன் பிடிபட்டான்.அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தற்போது இளங்கோ மற்றும் குமார் ஆகிய இருவரையும்போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்றொரு முக்கியக் குற்றவாளியான கண்ணன் என்பவனைப் போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர். விரைவில் அவனும் பிடிபடுவான் என்று சென்னை போலீசார் கூறியுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications