சென்னைக்கு செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர்: விவசாயிகள் எதிர்ப்பு
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை நம்பியுள்ள பாசன விவசாயிகள்போதிய நீர் திறந்துவிடக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தினர்.
சென்னை அருகே உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில்இதுவும் ஒன்று. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசனநிலங்களும் உள்ளன.
இருந்தாலும் இந்த ஏரியிலிருந்து விவசாய நிலங்களுக்குப் போதிய தண்ணீரை விடுவிக்கபொதுப்பணித் துறை அதிகாரிகள் மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் குன்றத்தூர் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள்சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்குவந்தனர்.
தங்களது பாசன நிலங்களுக்கு உடனடியாக நீர் திறந்து விடக் கோரி அவர்கள் முற்றுகைப்போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விவசாயிகளைச் சமாதானப்படுத்தினர்.
சென்னை நகர குடிநீருக்குப் போக மீதமுள்ள நீரைத்தான் விவசாய நிலங்களுக்கு வழங்க முடியும்என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாகக் குற்றம் சாட்டும் விவசாயிகள், எங்களுக்குப்போகத்தான் சென்னை நகருக்கு குடிநீர் எடுக்க முடியும் என்று வாதிடுகிறார்கள்.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தங்ககளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும்விவசாயிகள் கூறுகிறார்கள்.
உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடா விட்டால்விவசாயிகளைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications