சுயம்வரத்தில் பெண் தேடிய "54"

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரியில் நடந்த நவீன சுயம்வர நிகழ்ச்சியில் 54 வயதான ஒருவர் தனக்குரிய வாழ்க்கைத்துணையைத் தேடி விண்ணப்பித்தார்.

தர்மபுரியில் நவீன சுயம்வரம் நடந்தது. "கல்யாணம் வைபோகம்" திருமண தகவல் மையமும்,அமுதம் திருமண தகவல் மையமும் இணைந்து நடத்திய இதில் 250 ஆண்களும், 186 பெண்களும்கலந்து கொண்டு தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர்.

இவர்களில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார் 54 வயது முதியவர் ஒருவர். திருப்பத்தூரைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் என்ற அந்நபர், தனக்கென இரண்டாவது வாழ்க்கைத் துணைவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, விண்ணப்பமும் கொடுத்திருந்தார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் கட்டி, ஒரு வீட்டைஎழுதி வைப்பதாகவும் கிருஷ்ணமூர்த்தி ராவ் கூறினார்.

அவர் மேடையில் அனைவருக்கு முன்பாகவும் இவ்வாறு வெளிப்படையாகக் கூறியதைத் தொடர்ந்துஅந்நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் அவருடைய எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. இரண்டு பெண்கள் கிருஷ்ணமூர்த்திராவைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று தெரிவித்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தெரிவித்தனர்.

ஆனால் அந்தப் பெண்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுடைய பெயர்கள் மற்றும்விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின்போது 601 பேரின் ஜாதகங்கள் அடங்கிய விழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.20ம், சுயம்வர பதிவுக் கட்டணமாக ரூ.200ம் வசூலிக்கப்பட்டன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+