நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற சாமியார்கள்
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவிலை உடனடியாகக் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிவிஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாதுக்கள் இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.ஆனால், அவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து சாலையில் அமர்ந்து சிறிது நேரம் போராட்டம் நடத்திவிட்டுக் கலைந்தனர்.
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை பிப்ரவரி 21ம் தேதிக்குள் தங்களிடம் வழங்கவேண்டும் என்று வி.எச்.பி. கெடு விதித்திருந்தது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல்செய்திருந்த மனுவை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக சாதுக்கள் மாநாடு நடந்தது. டெல்லி ராம்லீலாமைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று ராமர் கோவில் கட்டுவது குறித்து முக்கிய முடிவுஎடுக்கப்பட்டது.
அதன்படி அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு உடனடியாக அனுமதி அளிக்குமாறுமத்திய அரசை வற்புறுத்தும் வகையில் இன்று (திங்கள்கிழமை) நாடாளுமன்றத்தை நோக்கிஊர்வலம் நடத்தி, முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
"இந்த விவகாரத்தில் இதற்கு முன் நாங்கள் எத்தனையோ தீர்மானங்களை எடுத்து,போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். ஆனால் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்நடத்துவதற்கு இப்போதுதான் சரியான நேரம் என்று கருதுகிறோம். இந்துக்களின் எழுச்சிக்கு இந்தஊர்வலமும், போராட்டமும் முக்கிய உதாரணமாக விளங்கும்" என்று வி.எச்.பி. தலைவர்களில்ஒருவரான ஆச்சார்யா தர்மேந்திரா கூறினார்.
ஊர்வலமும், முற்றுகைப் போராட்டமும் அமைதியாக நடக்கும். எங்களைத் தடுத்தால் அந்தஇடத்திலேயே அமர்ந்து போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து டெல்லி போலீசார் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும்ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்துக்குச் செல்லும்அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
சன்சத் மார்க், கன்னாட் பேலஸ், இண்டியா கேட், கோட்டை, ஜனாதிபதி மாளிகை எனநாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள வி.வி.ஐ.பிக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது. இந்தப் பகுதிகளில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜந்தர்மந்தர் வரை இந்த சாமியார்களை அனுமதிக்கவும் அதற்கு மேல் நாடாளுமன்றம் நோக்கிச்சென்றால் தடுத்து நிறுத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ராம்லீலாமைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாக வந்த சுமார் 300 சாமியார்கள்ஜந்தர்மந்தர் அருகே தடுக்கப்பட்டனர்.
அசம்பாவிதம் ஏதும் நடந்து பா.ஜ.க. அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திவிட வேண்டாம் எனவி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியாவிடம் பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள்பேசியிருந்தனர். இதனால் வன்முறை நடக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் இருக்காது என்றுதொகாடியா உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து போலீசார் தடுத்தவுடன் பிரச்சனை ஏதும் செய்யாமல் நடுரோட்டில் அவர்கள்அமர்ந்தனர். அவர்கள் மத்தியில் தொகாடியா உரையாற்றிய பின்னர் கலைந்து சென்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications