280 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
கராச்சி:
பாகிஸ்தான் சிறைகளில் கடந்த 2 ஆண்டுகளாகத் தவித்து வந்த 280 இந்திய மீனவர்கள் இன்றுவிடுதலை செய்யப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தங்கள் நாட்டு எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி280 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.
அந்த மீனவர்களின் 46 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்தது. பின்னர் பாகிஸ்தான்சிறைகளில் இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தும்பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்நிலையில் 280 மீனவர்களையும் விடுதலை செய்ய சமீபத்தில் பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.அதன்படி இன்று காலை அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடைய படகுகளும் திரும்பஒப்படைக்கப்பட்டன.
இன்று பிற்பகலுக்கு மேல் கராச்சி துறைமுகத்தை விட்டுக் கிளம்பி தங்கள் படகுகள் மூலமாகவே 280மீனவர்களும் இந்தியாவுக்குத் திரும்புவார்கள்.
கடந்த 1997ம் ஆண்டு சுமார் 400 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அதற்குப்பின்னர் அதிக எண்ணிக்கையிலான இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்வது இதுதான்முதல் முறையாகும்.
இதற்கிடையே இந்தியக் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக 94 பாகிஸ்தான் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மீனவர் சங்க அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications