முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளிக்க தடை: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவுக்கு எந்த மனுவையும் அனுப்பவோ, கொடுக்கவோகூடாது என்று அரசு ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பதவி உயர்வு, இடம் மாறுதல் உள்ளிட்டவை தொடர்பாக அரசு ஊழியர்கள் அளிக்கும்மனுக்கள் முதல்வரின் நேரடிப் பார்வைக்கு வருவது தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள்கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கும்ஆசிரியர்களுக்கம் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. வி.ஆர்.எஸ்.எனப்படும் கட்டாய ஓய்வூதியத் திட்டமும் அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தற்போதுதான் ஓரளவுசகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்குள்ளாக அவர்களுக்கு மற்றொரு"அடி"யும் விழுந்துள்ளது.
சென்னை கோட்டையில் இயங்கி வரும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு எந்த மனுவையும் அனுப்பக்கூடாது என்றும் கொடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறுவதற்காகவே முதல்வர் அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
இது குறித்த தகவல்கள் முதல்வரின் பார்வைக்கு உடனடியாகத் தரப்பட வேண்டும் என்பதாலேயே,இப்பிரிவில் அளிக்கப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறுதுறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பிரிவில் தங்கள் மனுக்களைச் சமர்ப்பித்து பலன் பெற்றுவந்தனர்.
பதவி உயர்வு, இடம் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைமுதல்வரின் தனிப் பிரிவில் சமர்ப்பித்து உடனடியாகப் பலன்களைப் பெற்று வந்தனர் அரசுஊழியர்கள்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் இப்பிரிவில் மனுக்களைக் கொடுக்கக் கூடாது என தமிழக அரசுதிடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள், உள்ளாட்சி-நகராட்சி-மாநகராட்சி ஊழியர்கள்,சத்துணவு ஊழியர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் அரசு கூறியுள்ளது.
மேலும் முதல்வரிடம் நேரடி கோரிக்கை விடுக்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால்இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களுடைய உரிமைகள் அனைத்தும் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளதாக லட்சக்கணக்கான அரசுஊழியர்களும் வேதனையுடன் கூறுகின்றனர்.
தங்கள் துறை தலைவர் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் மீது உருப்படியான நடவடிக்கைகள்எதுவும் எடுக்கப்படாததால்தான் முதல்வரின் தனிப் பிரிவில் மனுக்களைச் சமர்ப்பித்து உரியநிவாரணம் பெற்று வந்தோம். இப்போது அதிலும் மண் விழுந்து விட்டதே என்று அரசு ஊழியர்கள்புலம்பி வருகின்றனர்.
போலீசாருக்கு மட்டும்...
அரசு ஊழியர்களை இவ்வாறு புறக்கணித்துள்ள அரசு போலீசாருக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்துவிலக்கு அளித்துள்ளது.
தமிழக காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் முதல்வரின் தனிப் பிரிவில்வழக்கம் போல் தங்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கலாம் என்று அரசின் உத்தரவில்கூறப்பட்டுள்ளது.
இதனால் அரசு ஊழியர்கள் மேலும் நொந்து போயுள்ளனர். "போலீசாருக்கு ஒரு நியாயம்,எங்களுக்கு ஒரு நியாயமா? வேண்டுமென்றே எங்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறது அரசு" என்றுஅரசு ஊழியர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
-->












Click it and Unblock the Notifications