போலீசாரை இன்னும் நம்புகிறோம்: இளங்கோவன்
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் தங்களுக்கு தோல்வி உறுதி என்று தெரிந்துவிட்டதால் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலையேஒத்தி வைக்க அதிமுகவினர் முயல்கின்றனர் என காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், ரெளடிகளும், அதிமுகவினரும்சேர்ந்து நடுரோட்டில் வைத்துத் தாக்கியதைக் கண்டித்து நடு ரோட்டில் போராட்டம் நடத்திய இளங்கோவன்கூறியதாவது:
ஒரு அமைச்சர் தனது பதவியின் மரியாதையும் கண்ணியத்தையும் தூக்கி கடாசிவிட்டு மாற்றுக் கட்சியின்வேட்பாளரை உருட்டுக் கட்டையால் அடிக்கிறார். இந்தக் கேவலம் வேறு எங்காவது நடக்குமா? தமிழகம் எங்கேபோய்க் கொண்டிருக்கிறது?
வரம்பு மீறிவிட்ட அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். போலீசாரை நாங்கள் இன்னும் கூடநம்புகிறோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உள்ளது.
நாங்ள் காந்தி, நேரு வழியில் வந்தவர்கள். எனவே தான் சாத்வீகமாகப் போராடுகிறோம். எங்களுக்கு சுபாஷ்சந்திரபோஸ் வழியும் தெரியும். தேவையில்லாமல் எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள்.
தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுக அலற ஆரம்பித்துவிட்டது. அந்த பயத்தின் எதிரொலி தான் இந்தத் தாக்குதல்.இதன் மூலம் தேர்தலையே ஒத்தி வைத்துவிட அதிமுக முயல்கிறது என்றார் இளங்கோவன்.
உடனிருந்த காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் கூறுகையில், எங்கள் உயிரை விட கட்சியின் வெற்றி தான்முக்கியம். இதனால் அதிமுகவின் தாக்குதல்களுக்கு எல்லாம் பயந்துவிட மாட்டேன் என்றார்.
நேற்று நடந்த இந்தக் தாக்குதல் அதிமுகவுக்கு தொகுதியில் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது என்னவோஉண்மை.
-->












Click it and Unblock the Notifications