சதாமைக் கொல்ல ஜார்ஜ் புஷ் உத்தரவு?
நியூயார்க்:
ஈராக் அதிபர் சதாம் ஹூசேனைக் கொல்ல அமெரிக்கப் படைகளுக்கு ஜார்ஜ் புஷ் உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது.
தங்களுக்கு எதிரான நாட்டுத் தலைவர்களை சி.ஐ.ஏ. உதவியுடன் அமெரிக்கா கொல்வது வழக்கம். பல உலகத் தலைவர்கள் இதுபோலகொலை செய்யப்பட்டுள்ளனர். கியூபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல சி.ஐ.ஏ. பலமுறை முயன்றது. ஆனால், ரஷ்ய உளவுப்படையின் உதவியால் காஸ்ட்ரோ தொடர்ந்து தப்பிவிட்டார்.
அவரது சுருட்டில் கூட விஷம் தடவிக் கொலை செய்ய சி.ஐ.ஏ. முயன்றது. ஆனால், 1976ல் ஜெரால்ட் போர்ட் அதிபராக இருந்தபோதுவெளிநாட்டுத் தலைவர்களைக் கொல்லும் திட்டங்களுக்குத் தடைவிதித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த டோனால்ட் ரீகன் கூலிகளை வைத்துகொலை செய்யும் திட்டங்களுக்கும் தடை விதித்தார். இதனால் கொலைகளை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அரசு கூறி வருகிறது. (ஆனால்,மறைமுகக் கொலைகள் தொடர்கின்றன).
இந் நிலையில் முன்னாள் அதிபர் போர்ட் விதித்த அந்தத் தடையை நீக்கிவிட்டு சதாம் ஹூசேனைக் கொல்ல ஜார்ஜ் புஷ் உத்தரவிடுவார்என்று கூறப்படுகிறது.
சிகாக்கோ டெய்லி ஹெரால்ட் என்ற பத்திரிக்கை இத் தகவலைத் தெரிவித்துள்ளது. அதில் பேட்டியளித்துள்ள புஷ்சுக்கு நெருக்கமானசெனட்டரான பீட்டர் பிட்ஸ்ஜெரால்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர் புஷ்சுடன் இது குறித்துப் பேசியுள்ளேன். சதாம் எங்கே இருக்கிறார் என்பது குறித்த சரியான தகவல் கிடைத்தால், உடனே அந்தஇடத்தில் தாக்குதல் (ஏவுகணைத் தாக்குதல், கமாண்டோ தாக்குதல் உள்பட) நடத்தி அவரைக் கொல்ல முடியும். அதைத் தான் செய்யவும்போகிறோம் என்றார் ஜெரால்ட்.
அவர் மேலும் கூறுகையில், இது தொடர்பான முன்னாள் அதிபர் போர்டின் உத்தரவை புஷ் நீக்குவார். அதிபருடன் ஏர் போர்ஸ் ஒன்விமானத்தில் பயணம் செய்தபோது இது குறித்து என்னுடன் பேசினார். விரைவில் சதாமைக் கொல்லும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
10 ஆண்டுகளுக்கு முன் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ் ஈராக் மீது போர் தொடுத்தார். இதையடுத்து அவரைக்கொலை செய்ய சதாம் முயன்றதாகவும் அதற்குப் பழிவாங்கும் விதத்திலேயே அதிபர் புஷ் இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் கூடும் என்றும்கூறப்படுகிறது.
ஆனால், சதாம் தன்னைப் போலவே 7 போலிகளை உருவாக்கி வைத்திருப்பதாகவும், யார் உண்மையான சதாம் என்று தெரியவில்லைஎன்றும் சி.ஐ.ஏ. கூறுகிறது. அவர் தனது வெளியுலக நடமாட்டத்தை முற்றிலும் நிறுத்திவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்பது ஈராக்ராணுவத்தினருக்குக் கூட தெரியாது எனவும் சி.ஐ.ஏ. கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications