சாத்தான்குளத்தில் 55 சதவீத வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் இன்று நடந்த இடைத் தேர்தலில் சுமார் 55 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. சரியான வாக்குப் பதிவுவிவரத்தை இரவில் தான் தேர்தல் கமிஷன் வெளியிடும்.

பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. பலத்த போலீஸ்பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்தனர்.

நகரப் பகுதிகளில் காலை 7 மணி முதலே ஆண்களும் பெண்களும் வாக்குச் சாவடிகளில் குவிந்துவிட்டனர். இதனால் ஆரம்பம் முதலே மிகவிறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது. பிற்பகலில் வாக்குப் பதிவு மந்தமைடந்தது.

ஆனால், தொகுதியின் ஊரகப் பகுதிகளில் வாக்குப் பதிவு ஆரம்பம் முதலே மந்தமாக இருந்தது. அங்கு ஓட்டு மக்கள் பெரிய அளவில்ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் இத் தொகுதியின் வெறும் சுமார் 55 சதவீதமாக வாக்குகள் மட்டுமே பதிவாயின.

முன்னதாக ஆழ்வார்திருநகரி, படுகப்பத்து உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்களில் ஆரம்பத்திலேயே கோளாறுஏற்பட்டது. இதனால் புதிய எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் இங்கு வாக்குப் பதிவு சுமார் 1 மணி நேரம் தாமதமாகத்தொடங்கியது.

பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ள 39 சாவடிகளிலும் ஜாதி, மத, அரசியல்ரீதியில் பதற்றம்நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ள 48 கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுவாக்குப் பதிவு நடந்தது.

நாசரேத், கருங்குளம் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிரடிப்படை போலீசாரும், நீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைக்கும்வஜ்ரா வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியான சஞ்சீவ் குமார் தலைமையில் சாத்தான்குளம்தொகுதி முழுவதும் 1,800 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 1,55,093 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 72,932 பேர் ஆண்கள். 82,161 பேர்பெண்கள்.

மத்திய பார்வையாளர்கள் 5 பேரின் மேற்பார்வையில் சுமார் 800 மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தேர்தல்பணிகளில் ஈடுபட்டனர்.

படுகப்பத்துவில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் வாக்களித்தார்.தர்மநகரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் வாக்களித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தியாகராஜன் தொடர்ந்து பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கும் நேரில் சென்றுவாக்குப் பதிவைப் பார்வையிட்டார்.

அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணத்துக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனுக்கும் இடையில் தான் நேரடிப்போட்டி நிலவுகிறது. இவர்கள் தவிர 23 சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனர்.

கிருஸ்துவர்கள் நிறைந்த நாசரேததில் மிக அதிக அளவில் வாக்குப் பதிவு இருந்தது.

கள்ள ஓட்டைத் தடுக்க வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலின் இரண்டு இடங்களில் அழியாத மைவைக்கப்பட்டது. தேர்தலையொட்டி இன்று சாத்தான்குளத்தில் உள்ளூர் பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, தூத்துக்குடி அரசுபாலிடெக்னிக்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும்.

மார்ச் 1ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 11 மணிக்கே முடிவு தெரிந்துவிடும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+