ஜெ. ராஜினாமா செய்ய கருணாநிதி கோரிக்கை
சென்னை:
தேர்தல் ஆணையம் கடுமையானக் கண்டனம் தெரிவித்த பிறகும் முதல்வர் பதவியில் நீடிக்கத் தான் வேண்டுமாஎன்பதை ஜெயலலிதா யோசித்துப் பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சாத்தான்குளத்தில் சிமென்ட் ஆலை கட்டித் தருகிறேன்,மகளிர் கல்லூரி கட்டித் தருகிறேன் என்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முதல்வர் ஜெயலலிதாவாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
அதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடந்ததை மறைத்து, தான் வகிக்கும் உயர் பதவிக்கு மரியாதை தராமல் தலைமைச் செயலாளர் மூலம் தேர்தல்ஆணையத்திற்குக் கடிதம் எழுதினார்கள்.
அதையும் தேர்தல் ஆணையம், தாமதமாக இருந்தாலும் கூட, கண்டித்துள்ளது. இதற்குப் பிறகும் முதல்வர்பதவியில் தொங்கிக் கொண்டிருப்பது சரியா என்பது குறித்து ஜெயலலிதா யோசித்துப் பார்க்க வேண்டும்.
அது தான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றார் கருணாநிதி.
நாடாளுமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீர சாவர்க்கரின் படத்தைத் திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து கேட்டபோது, இறந்துபோன ஒருவரைப் பற்றி பேச விரும்பவில்லை என்று பதில் தந்தார்.
நல்லகண்ணுவும் கோரிக்கை:
இதற்கிடையே ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும்கோரியுள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோல் ஒரு முதல்வரை நேரடியாக தேர்தல் கமிஷன் கண்டித்தது இல்லை. அந்த அளவுக்கு அதிகாரதுஷ்பிரோயாகம் செய்த ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications