ரயில்வே பட்ஜெட்: சேலம்-பெங்களூர், சென்னை-ஈரோடு, கோவா, சண்டீகருக்கு புதிய ரயில்கள்
டெல்லி:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பல புதிய ரயில்களும் ரயில் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது:
பெங்களூர், கோவா, சண்டீகருக்கு புதிய ரயில்கள்:
சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு திருச்சி வழியாக புதிய தினசரி ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
அதே போல சேலம்- பெங்களூர் இடையே ஒரு தினசரி ரயிலும் விடப்படும்.
சென்னையில் இருந்து டேராடூன் வரை புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும். இந்த வாரந்திர ரயில் சண்டீகர், டெல்லி, சகாரன்பூர் வழியேசெல்லும்.
சென்னை- பெங்களூர் இடையே மேலும் ஒரு வாரந்திர புதிய ரயிலும் இயக்கப்படும்.
கோவா தலைநகர் வாஸ்கோவில் இருந்து சென்னைக்கு புதிய வாரந்திர ரயில் அறிமுகப்படுத்தப்படும். இது மட்காவ் வழியே செல்லும்.
பாண்டிச்சேரி வரை நீட்டிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் பாஸஞ்சர் ரயில் விரைவில் பாண்டிச்சேரி வரை நீட்டிக்கப்படும். அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின் இது அமலாக்கப்படும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புதிய ரயில் பாதைப் பணி அடுத்தாண்டுக்குள் முடிவடையும்.
சென்ட்ரல்- எழும்பூர் இணைப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் எழும்பூர் ரயில் நிலையத்தையும் இணைக்கும் பணிகள விரைவில் தொடங்கும்.
திருமயிலையில் இருந்து வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் வரும் ஜூன் மாதத்துக்குள் முடிவடையும்.
அகல ரயில் பாதையாக மாற்றம்:
விழுப்புரம்- பாண்டிச்சேரி இடையிலான மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக்கப்பட்டு வருகிறது.
இதைத் தவிர ராஜபாளையம்- கொல்லம், விருதுநகர்- தென்காசி, வடலூர்- கூடலூர், தஞ்சாவூர்- கும்பகோணம்- விழுப்புரம்ஆகியவற்றுக்கு இடையிலான மீட்டர் கேஜ் பாதைகளும் அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்படும்.
இரட்டை தண்டவாளம்:
அம்பாத்துரையில் இருந்து கொடைக்கானல் வரை இன்னொரு தண்டவாளம் அமைக்கப்படும். அதே போல சென்னை கடற்கரையில்இருந்து கொருக்குப்பேட்டை வரை மேலும் ஒரு தண்டவாளம் அமைக்கப்படும் என்றார் நிதிஷ்குமார்.
தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு திட்டங்கள் தரப்பட்டதேயில்லை. தொடர்ந்து ஒதுக்கப்பட்டே வந்தது.
எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் மக்கள் பிரச்சனையை உணர்ந்து செயல்பட்டு வரும் பா.ம.கவைச் சேர்ந்த மத்திய ரயில்வேதுறைஇணையமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் முயற்சிகளால் தான் இவ்வளவு திட்டங்கள் கிடைத்துள்ளன.
இதற்காக அவரையும் பாராட்டலாம். அவரது சிபாரிகளை ஏற்ற நிதிஷ்குமாரையும் பாராட்டலாம்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications