"வி.எச்.பி. தலைவர்களை சிறையில் தள்ள வேண்டும்"
டெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் அளிக்க பா.ஜ.க.அரசு எடுத்துள்ள முடிவு குறித்து எதிர்க் கட்சிகள் இன்று கடுமையாக தாக்கிப் பேசின.
ஹிமாச்சலப் பிரதேசத் தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வாஜ்பாய் தலைமையிலானமத்திய அரசு தற்போது அயோத்திப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளதாகவும் எதிர்க் கட்சிஉறுப்பினர்கள் பேசினார்கள்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று நடந்திருக்க வேண்டிய விவாதம்இன்றுதான் நடந்தது. நேற்று மாலையிலேயே அயோத்தி தொடர்பான விவாதம் நடைபெறுவதாகஇருந்தது. ஆனால் இது தொடர்பான விவாதத்தை ஒரு நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றுபல்வேறு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அயோத்தி தொடர்பான விவாதத்தை 27ம் தேதிக்கு(இன்று) ஒத்தி வைத்தார் மக்களவை சபாநாயகர் மனோகர் ஜோஷி.
அதன்படி இன்று அயோத்தி குறித்த விவாதம் தொடங்கியது. சமாஜ்வாடி கட்சித் தலைவரானமுலாயம் சிங் யாதவ் இந்த விவாதத்தை தொடங்கினார். அவர் பேசுகையில்,
இந்த நேரத்தில் அயோத்யா பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம்என்ன?
அயோத்யா விவகாரத்திற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பா.ஜ.க. அரசுஉண்மையிலேயே நினைத்திருந்தால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வேகமாகத் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று மட்டும் ஏன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை?
அவ்வாறு செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கியமான மத்தியஅமைச்சர்கள் சிக்கியுள்ளனர். அந்த வழக்கை விரைவுபடுத்தினால் அவர்களுக்குத் தண்டனைகிடைக்கும் என்ற அச்சத்தில்தான் அதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பியும் எப்போதும் நீதிமன்ற உத்தரவை மதித்தே கிடையாது.வி.எச்.பி. தலைவர்களை எல்லாம் சிறைக்குள்தான் தள்ள வேண்டும் என்று பொரிந்து தள்ளினார்முலாயம்.
இதையடுத்து விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications