சாத்தான்குளத்தில் 65 சதவீத வாக்கு பதிவு
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
சாத்தான்குளம் தொகுதியில் நேற்று நடந்த இடைத் தேர்தலில் பெரிய அளவிலான அசம்பாவிதசம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
மொத்தமுள்ள 1,55,059 வாக்காளர்களில் சுமார் 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தமிழகதலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார். 47,741 ஆண்களும், 52,809பெண்களும் வாக்களித்துள்ளனர்.
அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணத்துக்கும் காங்கிரஸ் வேட்பாளரும் வழக்கறிஞருமானமகேந்திரனுக்கும் இடையில் தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இவர்களைத் தவிர 23சுயேச்சைகளும் இத்தொகுதியில் போட்டியிட்டனர்.
நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் அனைத்தும்சீலிடப்பட்டு, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த வளாகத்தைச்சுற்றிலும் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தம் 10மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். 50 அதிகாரிகள் வாக்குகளை எண்ணுவார்கள்.18 சுற்றுக்களாக இந்த வாக்குகள் எண்ணப்படும்.
மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காலை 11 மணிக்கே இத்தொகுதிஎம்.எல்.ஏ. யாரென்பது தெரிந்து விடும்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள்முழுவதும் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி சாத்தான்குளம் முழுவதும்போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications