இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கு
டெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்த இந்திய வீரர்கள் தாங்கள்பெற்ற பரிசுத் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று நிதி அமைச்சர் ஜஸ்வந்த்சிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் சரி, பாகிஸ்தானைக் கட்டாயம் தோற்கடிக்க வேண்டும்என்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியினர் நேற்று அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுப்பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று ஜஸ்வந்த் சிங் இன்றுஅறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் பரிசுத் தொகை அவர்களுக்குத் தனியாகக் கிடைத்தாலும் சரி, அல்லது மொத்தமாகக்கிடைத்தாலும் சரி. அவர்கள் இதற்கான வருமான வரியைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் மிகவும் அருமையாக ஆடினார்கள்.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார் சிங்.
வாஜ்பாய், அத்வானி வாழ்த்து:
இதற்கிடையே பாகிஸ்தான் அணியை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் வாஜ்பாய்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நேற்று வாஜ்பாய் தன்னுடைய வீட்டில்குடும்பத்தினருடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய வீரர்களை துணைப் பிரதமர் அத்வானியும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.தென் ஆப்பிரிக்காவில் உள்ள அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்தார் அத்வானி.
குஜராத் வன்முறையில் இளைஞர் பலி:
இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பாக அகமதாபாத்தில் ஏற்பட்ட இனவன்முறையில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததை ஷாப்பூர் பகுதியில் ஏராளமானவர்கள் கொண்டாடி வந்தனர்.அப்போது திடீரென்று இனக் கலவரம் வெடித்தது. இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். ஒருஸ்கூட்டர் எரிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸுபர் என்ற 19 வயது முஸ்லீம் இளைஞர்துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இதையடுத்து மேலும கலவரம் வெடித்து விடாமல் இருப்பதற்காக அப்பகுதியில் ஏராளமானபோலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications