""நடந்தது போர் அல்ல"": இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி குறித்து கருணாநிதி
சென்னை:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம் யாரும்பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று திமுக தலைவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணியினரை நான் பாராட்டுகிறேன்.சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அருமையாகவிளையாடினார்கள்.
இது சந்தோஷமான செய்திதான். ஆனால் பாகிஸ்தானை ஏதோ போரிலேயே வென்றுவிட்டதுபோல இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விளையாட்டை விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன்விளையாட்டுப் போட்டியில்தான் நாம் ஜெயித்துள்ளோம். போரில் அல்ல என்பதை மறக்கக்கூடாது.
போட்டி நடப்பதற்கு முன்பும் பின்பும் இரு நாட்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர்கைகுலுக்கிக் கொண்டதையும் யாரும் மறந்துவிடக் கூடாது.
விளையாட்டுப் போட்டியில் அரசியலையோ மதத்தையோ கலக்க முயற்சிக்கக் கூடாது. எந்த ஒருவிளையாட்டிலும் அரசியல் சாயமோ அல்லது மதச் சாயமோ பூசப்படக் கூடாது. அது மிகவும்தவறானது.
நாம் வெற்றி கொண்டது எதிர்நாட்டு அணியைத்தான். அதை எதிரி நாடாகப் பார்க்கக் கூடாது. அதுஆரோக்கியமானதல்ல என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அரசியல்வாதி, இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்ட கருணாநதி ஒருதீவீர கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கூட சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில்,
ஒரு அணியினரை இன்னொரு அணியினர் கிரிக்கெட் மட்டைகளால் அடித்து மண்டையை உடைத்துவிட்டு, பந்தை அந்த அணியினரே வீசி, விக்கெட்டுகளைக் கைகளால் தள்ளிவிட்டு, அம்பயர்கேள்வி கேட்டதற்கும் தடுத்ததற்கும் வீண் தகராறு செய்துவிட்டு, வெற்றிக் கோப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடியவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டதற்கு ஒப்பானதுதான் அதிமுகபெற்ற வெற்றி என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications