பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது மதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவுடன் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ள மதிமுக, பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகவும் முடிவு செய்துள்ளதாக மறைமுகமாகதெரிவித்துள்ளது.

மதிமுகவின் 11வது பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பொதுக் குழுக் கூட்டம் என்பதால்பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

கட்சியைக் கலைத்து விட்டு திமுகவுடன் இணைவது தொடர்பாக முக்கிய முடிவுஎடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் நேற்று நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் முன்னணித் தலைவர்களான கண்ணப்பன்,செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் அவைத் தலைவர் எல். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின்னர் கணேசன்நிருபர்களிடம் கூறுகையில்,

மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதற்குஅதிமுகவும் ஆதரவு தருகிறது. எனவே மத அடிப்படைவாதத்தைக் கட்டுப்படுத்த திராவிடஇயக்கத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

திராவிட இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியும் பல்வேறு முறைகருத்துத் தெரிவித்துள்ளார். அதேபோல மதிமுகவும்,திமுகவும் மிகுந்த நட்புடன் இருக்க வேண்டும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து திமுகவுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த வி.எச்.பி. கூட்டத்தில் பெரியார், அண்ணா குறித்துத் தவறாகப்பேசப்பட்டது. இது போன்ற விஷமத் தனமான செயல்களைத் தொடர அனுமதிக்க முடியாது. மாநிலஅரசுக்குத் தெரிந்தே இது போன்ற செயல்கள் நடப்பதை கூட்டம் கண்டித்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது செயல் திட்டத்திலிருந்து விலகிச் செல்லாமல் உறுதியாகஇருக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்குப் பங்கம் வரும் வகையில் தேசியஜனநாயகக் கூட்டணி செயல்படக் கூடாது.

மத்திய அரசின் சில செயல்பாடுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான மக்கள் நம்பிக்கையைத்தகர்க்கும் விதத்தில் உள்ளது. மத்திய அரசு மீது மதிமுகவுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டுவருகிறது.

இந்த நிலை நீடித்தால் மதிமுகவுடன் ஒத்துப் போகும் கட்சிகளுடன் சேர்ந்து தேசிய ஜனநாயகக்கூட்டணியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்.

மத்திய பட்ஜெட்டுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுஎன்றார் கணேசன்.

மதிமுக செயற்குழு தீர்மானங்களைப் பார்க்கும்போது பா.ஜ.க.வை எதிர்த்து செயல்பட அது முடிவுசெய்து விட்டதாகத் தெரிகிறது. மேலும் சரியான சமயத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பொடா வழக்கில் வைகோ பல மாதங்களாகச் சிறையில் இருந்து வரும் நிலையில் அது குறித்துபா.ஜ.க. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதால் பொறுமையிழந்துள்ள மதிமுக இந்தமுடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிகிறது.

தற்போதைய மதிமுகவின் முடிவால் விரைவிலேயே அது திமுகவுடன் கூட்டணி சேர்ந்து பா.ஜ.க.கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணிக்குவித்திடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+