பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடங்குகின்றன
சென்னை:
தமிழகத்தில் நாளை முதல் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடக்கின்றன.
இந்த ஆண்டுக்கான பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் சுமார்4,66,786 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர்.
இவர்களைத் தவிர சுமார் 42,177 மாணவ, மாணவிகள் தனித் தேர்வுகளை எழுதவுள்ளனர். தமிழகம்முழுவதும் 1,353 மையங்களில் பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறுகின்றன.
தேர்வுகளை நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாகதமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்கள் "பிட்" அடிப்பது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடாமல்தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. "பிட்" அடித்துப் பிடிபட்டால் 5 ஆண்டுக்கு தேர்வுஎழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் முடிந்த பின்னர் விடைத் தாள்களைத் திருத்தி விரைவாக முடிவுகளை வெளியிடவும்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள்:
இதற்கிடையே என்ஜினியரிங், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரவிருக்கும்மாணவ, மாணவிகளுக்காக நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் நாளைமுதல்தான் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நுழைவுத் தேர்வு நடக்கும் மையங்களில் மார்ச் 3ம் தேதி (நாளை) முதல் இந்தவிண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் 55 மையங்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்படும். மாணவ, மாணவிகள்ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தபால் மூலமாக வரும் 22ம் தேதிக்குள் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்களை அண்ணாபல்கலைக்கழகத்தில் நேரடியாக சேர்க்க விரும்புபவர்கள் 28ம் தேதி வரை கொடுக்கலாம்.
ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். நுழைவுத் தேர்வுக்கானஹால்டிக்கெட் கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications