தாய்-மகள்-பேத்தி கழுத்தை அறுத்து படுகொலை: கோவையில் பரபரப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் வயதான பெண், அவருடைய மகள் மற்றும் பேத்தி ஆகிய 3 பேரும் கழுத்துஅறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர்-பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கும் இவருடைய மனைவிகீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சீனிவாசன் சமீபத்தில் 2வதுதிருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. மேலும் தான் வேலை பேர்த்த ஒரு தனியார் மில்லில்இருந்து சீனிவாசன் விருப்ப ஓய்வு பெற்றார்.
ஆனால் இதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் ரூ.1.5 லட்சம் பணத்தை தன்னிடம்தான் கொடுக்கவேண்டும் என்று கோரி அந்த மில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார் கீதா. இதையடுத்து அந்தப்பணத்தை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் மில் நிர்வாகம் திணறி வந்தது.
இதற்கிடையே வரதட்சணை கேட்டு கீதாவை சீனிவாசன் தினந்தோறும் துன்புறுத்தி வந்ததாகக்கூறப்படுகிறது. இது தொடர்பாக கீதா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள்இருவர் தொடர்பான விவாகரத்து வழக்கும் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கீதா தன் 2 வயது மகள் ரஞ்சனியுடன் தன்னுடைய தாயார் அமிர்தத்தின் வீட்டில்தான் கடந்த சிலநாட்களாக வசித்து வந்தார்.
இந்நிலையில் பீளமேடு பகுதி காவலாளி இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வீட்டின் பக்கமாகச்சென்றபோது, வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் அமிர்தம் கழுத்து அறுபட்ட நிலையில்ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பக்கத்து வீட்டுக் காரர்களும் திரண்டு திறந்து கிடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது,அங்கு கீதாவும் ரஞ்சனியும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.
அமிர்தத்தின் வீட்டிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதிலிருந்து நகைகள்,பணம் எதுவும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை.
குடும்பப் பிரச்சனை காரணமாக சீனிவாசன் தான் இந்தக் கொலைகளைச் செய்தாரா அல்லதுகொள்ளைக் கும்பல் ஏதும் இதைச் செய்ததா என்று தெரியவில்லை.
இதற்கிடையே சீனிவாசன் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேறு கோணங்களிலும் இந்த வழக்கு விசாரணையை போலீசார்துவக்கியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா நேரடியாக சம்பவம் நடந்தஇடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
ஒரே வீட்டில் நடந்த இந்த 3 படுகொலைகள் கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications