வாஜ்பாயுடன் புஷ் தொலைபேசியில் பேச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஈராக் மற்றும் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் டெலிபோனில்பேசினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாஜ்பாய் பேசியபோது பாகிஸ்தானின் எல்லை தாண்டியபயங்கரவாதம் குறித்து அமெரிக்கா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து வாஜ்பாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்புஷ்.

அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ளுமாறு பாகிஸ்தானைத் தொடர்ந்துவற்புறுத்துவேன் என்று வாஜ்பாயிடம் புஷ் உறுதி அளித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டால்தான் அந்த நாட்டுடன் பேச்சுநடத்துவோம் என்று வாஜ்பாயும் அப்போது திட்டவட்டமாக புஷ்சிடம் கூறினார்.

மேலும் ஈராக் மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் தங்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் புஷ்கேட்டுக் கொண்டார். ஈராக் தொடர்பாக வேறு சில விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.வாஜ்பாய்-புஷ் டெலிபோன் பேச்சு சுமார் 7 நிமிடங்களுக்கு நீடித்தது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+