யானைக்கால் தடுப்பு மருந்துகள் இலவசமாக வினியோகம்
சென்னை:
தமிழகத்தில் யாக்ைகால் நோய் தாக்குதல் அதிகம் உள்ள 13 மாவட்டங்களில் அதற்கான தடுப்பு மருந்துகளை இலவசமாக வினியோகிக்கமாநில சுகாதாரத்துறைமுடிவு செய்துள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த நோய்த் தாக்குதல் அதிகம் உள்ளது. கொசுவினால் பரவும் இந்த நோயால் தாக்கப்பட்டவர்களின்கால்கள் வீங்கும். இதனால் நடமாட முடியாத நிலை உருவாகும். அதே போல ஆண் நோயாளிகளுக்கு விறைகளில் வீக்கமும் வலியும்ஏற்படுகிறது.
சென்னையின் குடிசைப் பகுதிகள், நாகப்பட்டிணம், கடலூர் போன்ற மாவட்டங்களில் இந்த நோய்த் தாக்குதல் மிக அதிகமாக இருந்தது.ஆனால், தொடர்ந்து எடுக்கப்பட்ட பல மருத்துவ நடவடிக்கைகளால் இப்போது குறைய ஆரம்பித்துள்ளது.
இப்போது மீண்டும் தீவிர யானைக்கால் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக வீடுதேடிப் போய் மக்களுக்குஇலசவமாக மருந்துகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 23ம் தேதி முதல் இந்த மருந்துகள் இலவசமாக வினியோகிக்கப்படும்.
அங்கன்வாடி(பால்வாடி)ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வீடுவீடாக சென்று இந்த மருந்தை வினியோகிக்க உள்ளனர்.
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மருந்து தரப்படும். கர்ப்பிணிகள் இதை உட்கொள்ளக் கூடாது என மருத்துவத்துறைஎச்சரித்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் யானைக் கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.8 சதவீதமாக இருந்தது.இப்போது இது 0.06 சதவீதமாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications