2 ராணுவத்தினரை விடுவித்தனர் புலிகள்
கொழும்பு:
தங்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த ஒரு இலங்கை ராணுவ வீரரையும், ஒரு போலீஸ்காரரையும் விடுதலைப் புலிகள் இன்று விடுதலைசெய்தனர்.
புலிகளுடன் நார்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ராணுவ வீரர் கடந்த ஆண்டு டிசம்பரிலும், போலீஸ்காரர் கடந்த மாதமும் புலிகளால் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க இலங்கை அரசு கேட்டுக் கொண்டதையடுத்து நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவினர்கிளிநொச்சிக்குச் சென்று புலிகளுடன் பேச்சு நடத்தினர்.
அப்போது இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட புலிகளில் 2 பேரை விடுவித்தால் தான் இவர்களை விடுவோம் என புலிகள் கூறினர். ஆனால்,நார்வே அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. இந்த இருவரையும் விடாவிட்டால் நாங்கள் இலங்கையில் அமைதிக் கண்காணிப்புப்பணியிலேயே ஈடுபடுவதை கைவிடுவோம் என அவர்கள் கூறினர்.
இதையடுத்து ராணுவ வீரரையும் போலீஸ்காரரையும் புலிகள் விடுவிக்க ஒப்புக் கொண்டனர்.
கடற்படையினருக்கு இலங்கை பொது மன்னிப்பு:
இதற்கிடையே புலிகளுடன் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது உயிரைக் காத்துக் கொள்ள பணியைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல்ஓடிய 9,400 கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
முன்பு இது போல பணியைவிட்டு ஓடிய 51,000 ராணுவத்தினருக்கு இந்த பொது மன்னிப்பு தரப்பட்டது.
இது போல ஓடிய பலரும் கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டு வருவதாலும் படைகளை மீண்டும் பலப்படுத்த அரசு முயல்வதாலும் இந்தப்பொது மன்னிப்புத் தரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications