போர்: வளைகுடாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஈராக்கில் போர் வெடிப்பது உறுதியாகிவிட்டதால், தேவைப்படும்பட்சத்தில் வளைகுடாவில் இருந்து இந்தியர்கள் அனைவரையும்பாதுகாப்பாக வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை இணையமைச்சர் திக்விஜய்சிங் இதனைத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ள 557 பஸ்களைஆப்கன் அதிகாரிகளிடம் ஒப்படைத்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

வளைகுடா நாடுகளில் 40 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். போர் வெடிக்கும்பட்சத்தில் நாடு திரும்ப விரும்பும் அனைத்து இந்தியர்களையும்பத்திரமாக திரும்ப அழைத்து வருவோம். இதற்காக ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை சிறப்பு விமானங்களை இயக்க முடிவுசெய்துள்ளன. இந்தப் பணிக்கு தேவையான அளவு விமானங்கள் ஒதுக்கப்படும் என்றார்.

சதாம் ஒரு பயங்கரவாதி: அமெரிக்கா

இதற்கிடையே ஈராக்கைத் தாக்குவதில் படு தீவிரமாக உள்ள அமெரிக்கா, தனது பயங்கரவாதிகள் பட்டியலில் ஈராக்கும் உள்ளதாகவும் எனவேஅந்நாட்டு அதிபரான சதாம் ஹூசேனும் தீவிரவாதியே என்றும் கூறியுள்ளது.

அதே நேரததில் அமெரிக்கா ஈராக்கைத் தாக்குவதற்கு போதுமான காரணங்கள் இல்லை எதுவும் இல்லை. அதனால் ஈராக் மீது அமெரிக்காபோர் தொடுக்கக் கூடாது என்ற போப் இரண்டாம் ஜான் பால் கூறியுள்ளார்.

ஆனால் அவருடைய அறிவுரையையோ, கோரிக்கையையோ ஏற்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் ஈராக் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்துக்களை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபிஅன்னான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈராக் மீதான எந்தவொரு தாக்குதலையும் ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது. ஈராக்கைத் தாக்க இரண்டாவது தீர்மானத்தை ஐ.நாவில் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை என அமெரிக்காவிடம் ஜெர்மன்கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+