தமிழக காவல்துறையில் பெரும் மாற்றம்: எஸ்.பிக்கள் கூண்டோடு டிரான்ஸ்பர்
சென்னை:
திலகவதி ஐ.பி.எஸ். தவிர தமிழக காவல்துறையில் பல மூத்த அதிகாரிகளும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த அதிகாரி என பெயர் எடுத்துள்ள ஈரோடு மாவட்ட எஸ்.பி. சைலேஷ்குமார் யாதவ், திருட்டு வி.சி.டி.ஒழிப்புக்கான எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடுஉள்ளிட்ட பல மாவட்ட எஸ்.பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாக இருந்து வந்த கூடுதல்டி.ஜி.பி. குமாரசாமி அதேபொறுப்பில் டி.ஜி.பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அதே போல தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியில் உள்ள கூடுதல் டி.ஜி.பி. கோவிந்த் அதேபொறுப்பில் டி.ஜி.பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தஞ்சை எஸ்.பியாக இருந்த கந்தசாமி மாற்றப்பட்டு மதுரை சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரைபோலீஸ் கமிஷனராக இருந்த சூரிய பிரசாத் சென்னை தொழில் நுட்பப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் சேலம் மாவட்ட எஸ்.பியாகமாற்றப்பட்டுள்ளார். அதிரடி அதிகாரியான இவர் ரவுடிகளை ஒழித்துக் கட்டுவதில் பெயர் பெற்றவர். சேலத்தில்ரெளடிகள் அட்டகாசம் பெருகியுள்ளதால் அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு அங்குமாற்றப்படுவதாகத் தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பியாக இருந்த செளந்தரராஜன் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நெய்வேலி லிக்னைட் நிறுவன கூடுதல் எஸ்.பியாக இருந்த பி.ராஜேந்திரன் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
புதுக்கோட்டை கிரைம் பிராஞ்ச் எஸ்.பி. ஆர். கதிரேசன் மதுரை கிரைம் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையின்துணை கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி. சென்னை மதுவிலக்கு எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்து அறநிலையத்துறை எஸ்.பி. ரவீந்திரன் சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னர் பி.பாலசுப்பிரமணியம் ஈரோடு எஸ்.பியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
திருட்டு வி.சி.டி. ஒழிப்பு எஸ்.பியாக இருந்த சுந்தரமூர்த்தி நாகப்பட்டிணம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. பாரி நீலகரி மாவட்ட எஸ்.பியாகிறார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications