பி.இ., எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு: ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம்
சென்னை:
இன்ஜினியரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்காக இன்று முதல்51 ஆன்லைன் மையங்கள் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடக்கவுள்ள நிலையில் கடந்த 3ம் தேதிமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவ, மாணவிகளும் அவர்களுடையபெற்றோர்களும் ஏமாற்றமே அடைந்தனர். இன்டர்நெட்டில் மட்டுமே விண்ணப்பங்கள்வழங்கப்படும் என்றுதான் விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர்கள்தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு விண்ணப்ப வினியோகம்தொடர்பாக வெளியிட்டு செய்திக் குறிப்பில்,
தமிழகத்தின் 36 நகரங்களில் உள்ள 51 ஆன்லைன் மையங்கள் மூலம் மாணவ, மாணவிகள்நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்துக்கான டி.டியுடன் இந்த ஆன்லைன்மையங்களுக்கு மாணவ, மாணவிகள் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் உடனடியாக ஹால் டிக்கெட் அவர்களுக்குவழங்கப்படும். நேரில் செல்ல முடியாதவர்கள் தங்கள் புகைப்படத்துடன் அவர்களுடையபெற்றோரையோ அல்லது வேறு பிரதிநிதியையோ மையத்திற்கு அனுப்பி வைக்கலாம். மாணவரின்அங்கீகாரக் கடிதமும் கொடுக்கப்பட்டால்தான் ஹால் டிக்கெட் அந்தப் பிரதிநிதியிடம் வழங்கப்படும்
வரும் 28ம் தேதி வரை இந்த ஆன்லைன் மையங்கள் செயல்படும். சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவை இயங்கும். எனவே மாணவ, மாணவிகள் முதல் நாளே சென்றுநெருக்கியடிக்காமல், அவசரப்படாமல் நிதானமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகள் இன்று நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்கஆரம்பித்தனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 6 மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலையிலிருந்தே மாணவ, மாணவிகளும் தேர்வுக் கட்டணத்திற்கான டி.டிக்களை சமர்ப்பித்துஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு உடனடியாக ஹால் டிக்கெட்டுகளும்வழங்கப்பட்டன.
ஆனாலும் தற்போது பிளஸ் டூ தேர்வுகளும் நடைபெற்று வரும் நிலையில், நுழைவுத் தேர்வுக்காகவிண்ணப்பிக்க வருவதால் பரீட்சைகளுக்காக படிக்க முடியவில்லை என்று பல மாணவர்களும்மாணவிகளும் வருத்தத்துடன் தெரிவித்தனர். தேர்வுகள் முடிந்த பின்னர் நுழைவுத் தேர்வுக்குவிண்ணப்பிக்க ஏற்பாடு செய்திருக்கலாம் என்றம் அவர்கள் கூறினர்.
இருந்தாலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக வந்து விண்ணப்பங்களைஆன்லைனிலேயே நிரப்பி, ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுச் செல்கின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications