கச்சத் தீவு திருவிழா: தமிழக- இலங்கை மீனவர்களால் பெரும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் கட்டாயம் கலந்து கொள்வோம் என்றுராமேஸ்வரம் மீனவர்கள் பிடிவாதம் பிடிப்பதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கை மீனவர்களால் 118 தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில்ஏற்கனவே பரபரப்பு நிலவி வருகிறது.

93 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் எஞ்சிய 25 மீனவர்களையும்விடுவிக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்று ராமேஸ்வரத்தில் முழு கடையடைப்பும் நடந்தது.

இதற்கிடையே நாகப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 21 மீனவர்களையும்இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவிலில் இன்று தேரோட்டத் திருவிழாநடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இலங்கை மற்றும்தமிழக மீனவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால் கச்சத் தீவு அருகே சென்று தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால்தான் அவர்களைஅடுத்தடுத்து இலங்கை மீனவர்களும் கடற்படையினரும் அடிக்கடி கடத்திக் கொண்டுசெல்கிறார்கள். இந்நிலையில் தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் நடக்கும் திருவிழாவில் கலந்துகொண்டால் இலங்கை மீனவர்களுடன் பெரிய அளவிலான கைகலப்பு சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.

எனவே கச்சத் தீவு திருவிழாவிற்குச் செல்ல வேண்டாம் என்று ராமேஸ்வரம் மீனவர்களை மாவட்டநிர்வாகமும், போலீசாரும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தத் திருவிழாவில் கட்டாயம்கலந்து கொள்வோம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் பிடிவாதமாகக் கூறியுள்ளனர்.

இதனால் ராமேஸ்வரத்திலும் கச்சத் தீவிலும் இன்று பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப் பகுதியில் இந்திய கடற்படையினரும் கடலோரக் காவல் படையினரும் தீவிர ரோந்துப் பணியில்ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டிச் சென்று மீன்பிடிப்பதைத் தடுக்கவும் இந்தப் படையினருக்குமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+