அப்பாவும் சரியில்லை..மகனும் சரியில்லை: ஜெ. கிண்டல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

எனது எதிரிகள் என்னை ஒருமுறை தாக்கினால் அவர்களை நான் பத்து முறை பதிலுக்குத்தாக்குவேன் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தனது மாவட்டச் சுற்றுப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெயலலிதா இன்று திருவாரூர் வந்தார். மாவட்டகலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் பல அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான அங்கு மக்களிடையே ஜெயலலிதா பேசியதாவது:

சுட்டெரிக்கும் வெயிலிலும் என் பேச்சைக் கேட்க திரண்டு வந்த உங்களுக்கு நன்றி. இது தெய்வத் திருநகர். தவறுசெய்தவன் தன் மகனாகவே இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று நீதியை நிலை நாட்டியமனுநீதிச் சோழன் ஆண்ட ஊர்.

அன்று அப்படி ஒரு தந்தை இருந்தார். ஆனால், இன்று உள்ள தந்தை தன் பிள்ளைகளை தண்டிக்கிறாரா?. இல்லை.தண்டிக்க முடியவில்லை. ஏன்?. தான் சரியாக இருந்தால் தானே மகனை தண்டிக்க முடியும்.

இன்றைக்கு மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நானும் பெண் தான். எலிசபெத் ராணி, இந்திரா காந்தி, பெனாசிர்பூட்டோ போன்றவர்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி இருந்தது. இதனால் முன்னுக்கு வந்தார்கள். எனக்குஎந்தப் பின்னணியும் இல்லை. இருந்தும் இந்த மாநில முதல்வராக வந்தற்குக் காரணம் என் தன்னம்பிக்கை.பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக நேற்று திண்டுக்கல்லில் அரசுத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்த ஜெயலலிதாபேசுகையில்,

என்னை யாராவது அழிக்க முயன்றால் என்னை ஒருவர் தாக்க முயன்றால் எனக்கு எதிராக அத்தனைபேரும் ஒன்று சேர்ந்து பழி வாங்க வந்தால் அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள நான்ஆவேசப்பட்டுத்தானே ஆகவேண்டும்?

என்னை ஒருமுறை தாக்கினால் நான் அவர்களை பத்து முறை திருப்பித் தாக்க தயங்க மாட்டேன்.

நான் என்றைக்குமே உங்கள் அன்புச் சகோதரிதான். நான் நெருப்பாகவும் இருப்பேன், குளிர்ச்சிதரும் நீராகவும் இருப்பேன். என்னிடம் பழகுபவர்களின் குணத்தைப் பொருத்து எனது குணம்வெளிப்படும் என்றார் ஜெயலலிதா.

நாளை ஜெயலலிதா தர்மபுரி செல்கிறார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+