அஸ்ஸாம் எண்ணெய் கிடங்குகள் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

தின்சுகியா (அஸ்ஸாம்):

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலிய கிடங்குகளை உல்பா தீவிரவாதிகள் துப்பாக்கியால்சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்கினர். இதில் பல எண்ணெய் கிடங்குகளும், பெட்ரோலியபைப்லைன்களும் உடைந்து தீப்பிடித்து எரிந்து வருகின்றன.

இது தவிர காவல்துறை முகாமையும், கமாண்டோக்கள் முகாமையும், பிகார் மாநில கூலிக் தொழிலாளர்கள் மீதும்தாக்குதல் நடத்தினர். இதில் 2 தொழிலாளர்கள் பலியாகினர்.

இந்தியன் ஆயில் கார்போரேசன், ஆயில் இந்தியா லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமானபெட்டோலிய கிடங்குகளில் இன்று அதிகாலையில் ஒரே நேரத்தில் இந்த திடீர் தாக்குதல்கள் நடந்தன. அதேநேரத்தில் காவல்துறை முகாமும் தாக்கப்பட்டது.

தின்சுகியா மாவட்டத்தில் திக்போய் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இது இந்தியன் ஆயில்நிறுவனத்துக்குச் சொந்தமானது. இதன் மீது இன்று அதிகாலையில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில்மிகப் பெரிய பெட்ரோலியத் தொட்டியில் தீப் பிடித்துக் கொண்டது.

சுமார் 5,000 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்தத் தொட்டியில் முழு அளவில் பெட்ரோலியம் இருந்தது. இன்னும்இந்தத் தொட்டி தீப் பிடித்து எரிந்து கொண்டுள்ளது.

அதே மாவட்டத்தில் உள்ள கதால்குரி என்ற இடத்தில் பெட்ரோலிய எரிவாயுவைக் கொண்டு செல்லும் ராட்சதகுழாய்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த குழாய்கள் வெடித்துச் சிதறின. அதில் கொண்டுசெல்லப்பட்ட எரிவாயு தீப்பிடித்து எரிந்தது.

ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டோ அல்லது கிரனைட் குண்டுகளைக் கொண்டோ தான் இத் தாக்குதல்கள்நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் கோவால்பாரா மாவாட்டத்தில் உள்ள காவல்துறை கமாண்டோக்கள் முகாமின் மீது ஏ.கே.-47 ரகதுப்பாக்கிகளைக் கொண்டு உல்பா தீவிரவாதிகள் சுட்டனர். உடனே சுதாரித்துக் கொண்டே கமாண்டோக்கள்திருப்பிச் சுட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.

ஆனால், அருகில் இருந்த பிகார் தொழிலாளர்களின் குடிசைப் பகுதி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடினர். இதில்2 தொழிலாளர்கள் இறந்தனர். (அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே என தனி நாடு கேட்டு இந்த அமைப்பு போராடிவருகிறது). மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக போன்கைகாவ்ம் மாவட்டத்தில் போலீசாரின் முகாமின் மீது ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினனர். ஆனால், இரண்டு முறையும் குறி தவறியதால் போலீசார் தப்பிவிட்டனர்.

இச் சம்பவங்கள் நடந்த சில மணி நேரத்தில் குவஹாத்தியில் உள்ள முக்கிய பத்திரிக்கை அலுவலகங்களைஉல்பாவின் கமாண்டர் பரேஷ் பருவா தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இத் தாக்குதலை நாங்கள் தான்நடத்தினோம். எனது வீரர்களின் இத் தாக்குதல்கள் மேலும் தொடரும் என்று தெரிவித்தார்.

தாக்குதல்கள் நடந்த இந்த இரு பெட்ரோலிய கிடங்குகளிலும், பெட்ரோலிய பைப் லைன்களுக்கு அருகிலும்மேலும் பல எண்ணெய் தொட்டிகளும், எரிவாயு சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன. இந்தக் கிடங்குகளுக்கும் தீபரவி வருவதால் சேதம் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று தெரிகிறது.

அதிகாலையில் தாக்குதல் நடந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என போலீசார்கூறுகின்றனர். பல மீட்டர் உயரத்துக்கு தீ எரிந்து கரும்புகை கிளம்பியதால் அந்தப் பகுதிகளின் மக்கள் பெரும்அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

ராணுவம், போலீஸ், தீயணைப்புப் படைகளுக்குச் சொந்தமான 75க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் தீயைஅணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. காலையில் 70 அடி உயரம் வரை தீ எரிந்தது. இப்போது இது 30மீட்டராகக் குறைந்துள்ளது.

பெட்ரோலியம் முழுவதும் எரியும் வரை அதை நெருங்கவே முடியாது என தீயணைப்புப் படையினர்கூறியுள்ளனர். மிக தூரத்தில் இருந்த வண்ணமே தீயணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தீ பரவாமல்தடுக்கும் வேலையில் தான் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அருகில் உள்ள பெட்ரோலிய கிடங்குகளில் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வெப்ப நிலைஉயர்ந்துவிடாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தாக்குதலையடுத்து எண்ணெய் நிறுவனங்களின் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

உல்பா தீவிரவாதிகள் தான் இத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. சில காலம்அமைதியாக இருந்த இந்த அமைப்பு இப்போது தான் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

பெட்ரோலிய சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீயில் ரூ. 10 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+