தமிழகத்தில் 2 விபத்துகள்: 17 கேரள பக்தர்கள் உள்பட 24 பேர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே இன்று காலை பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கரமானவிபத்தில் கேரளாவைச் சேர்ந்த 7 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தின் 17 பக்தர்கள்உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அதேபோல் வேலூர் அருகே இன்று பிற்பகல் நடந்த மற்றொரு விபத்தில் 2 பெண்கள், ஒரு பெண்குழந்தை உள்பட 7 பேர் இறந்தனர்.
கேரளாவின் எர்ணாகுளம் அருகே இடைக்காட்டு வயல் என்ற இடத்திலிருந்து சில பக்தர்கள்தமிழகத்தில் உள்ள வேளாங்கன்னி கோவிலுக்கு வேன் மூலம் சிலர் சுற்றுலா வந்தனர். பின்னர்அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தம்பிநாயக்கன் பாறைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது வேன்டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து அந்த வேன் தாறுமாறாக ஓடத் தொடங்கியது.வேனில் இருந்தவர்கள் எல்லாம் "அய்யோ அம்மா..." என்று அலற ஆரம்பித்தனர்.
அப்போது எதிர் திசையில் போடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சுடன்அந்த வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்திலேயே வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. வேனில் இருந்த அனைவரும் தூக்கிஎறியப்பட்டனர். இதில் 7 பெண்கள், ஒரு பெண் குழந்தை உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயேகொல்லப்பட்டனர்.
ஒன்றரை வயதான மற்றொரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தது. இந்தப்பயங்கரமான விபத்தில் படுகாயமடைந்த மேலும் 13 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அவர்களில் வேனில் வந்த மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பென்னி,அவருடைய மனைவி சோனியா மற்றும் மகள் நயினா ஆகிய இந்த மூன்று பேருக்கும் திண்டுக்கல்அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்தவர்களில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 8 பயணிகளும்அடங்குவர்.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெ. இரங்கல்:இந்த விபத்து தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் டாக்டர்களுக்குஉத்தரவிட்டுள்ளார்.விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன்,திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பின்னர் மருத்துவமனைக்குச் சென்றுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.விபத்தில் பலியான அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின்குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைப்பது சந்தேகமே என்று விஸ்வநாதன் பின்னர் நிருபர்களிடம்தெரிவித்தார்.வேலூர் அருகே...
இதற்கிடையே வேலூர் அருகே தனியார் பஸ்சும் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்2 பெண்கள், ஒரு பெண் குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
வேலூரிலிருந்து அரக்கோணத்திற்குச் சென்று கொண்டிருந்த பஸ்சும், சென்னையிலிருந்துபெங்களூர் சென்று கொண்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த டிரக்கும் காவேரிப்பாக்கம் அருகே நேருக்குநேர் மோதிக் கொண்டதால்தான் இவ்விபத்து ஏற்பட்டது.
இன்று பிற்பகலில் ஏற்பட்ட இவ்விபத்தில் மேலும் 44 பேர் படுகாயமடைந்து வேலூர் மற்றும்வாலாஜாபேட்டை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர்கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications