தூத்துக்குடியில் ரூ.1.3 கோடி செந்தூர மரக் கட்டைகள் பறிமுதல்
தூத்தக்குடி:
தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சிங்கப்பூருக்குக்கடத்தப்பட இருந்த ரூ.1.3 கோடி மதிப்புள்ள அரிய செந்தூரம் வகையைச் சேர்ந்த மரக் கட்டைகள்பறிமுதல் செய்யப்பட்டன.
செந்தூரம் ரகத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் வளரும் தன்மைகொண்டவை. மரச் சிற்பங்கள் செய்வதற்காகவும், இசைக் கருவிகள் செய்வதற்காகவும் இவைபயன்படுத்தப்படுகின்றன.
இந்த மரங்களை வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்கஅதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள ஒரு மரக் கிட்டங்கியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 22.94 டன்கள் எடையுள்ள செந்தூர மரக் கட்டைகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவற்றை சிங்கப்பூருக்குக் கடத்த சிலர்திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1.3 கோடி ஆகும்.
இதையடு"து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக மதுரை தனி நீதிமன்றத்தில்வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நான்குமுக்கிய மர ஏஜென்சி நிறுவனங்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செந்தூர வகை மரங்கள் கடத்தப்பட்டு பிடிபடுவது இப்போதுதான் முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications